Top 10 News : ‘கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல’- அமைச்சர் சேகர்பாபு, மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News : ‘கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல’- அமைச்சர் சேகர்பாபு, மிதமான மழைக்கு வாய்ப்பு!

Top 10 News : ‘கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல’- அமைச்சர் சேகர்பாபு, மிதமான மழைக்கு வாய்ப்பு!

Divya Sekar HT Tamil
Nov 08, 2024 01:37 PM IST

மிதமான மழை பெய்ய வாய்ப்பு, கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல என கூறிய அமைச்சர் சேகர்பாபு என இன்றைய முக்கிய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

Top 10 News : ‘கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல’- அமைச்சர் சேகர்பாபு மிதமான மழைக்கு வாய்ப்பு!
Top 10 News : ‘கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல’- அமைச்சர் சேகர்பாபு மிதமான மழைக்கு வாய்ப்பு!

மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கூண்டோடு முடித்துவிட்டோம்.. டென்ஷன் எங்களுக்கல்ல - அமைச்சர் சேகர்பாபு!

நான்கு கால் பாய்ச்சலில் நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்ட திமுக, தற்பொழுது எட்டு கால் பாய்ச்சலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தாமரை எங்காவது மலர்ந்தால் தானே டென்ஷனாக வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவர்களை கூண்டோடு முடித்துவிட்டோம்; டென்ஷன் எங்களுக்கல்ல, எதிர்த்து களத்தில் நிற்பவர்களுக்குத்தான் என்று கூறினார்.

பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுசெய்யப்பட்ட 246 உதவி செயற்பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 246 உதவி செயற்பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அகழாய்வில் 6,000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்கப் பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜாஸ்பர், சார்ட் என்ற இக்கற்கள், முன்னோர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்கான கருவிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம்

எதிர்பார்த்த அளவு உறுப்பினர் சேர்க்கை நடக்காத நிலையில், வரும் 11ஆம் தேதி சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடக்கும் என அறிவிப்பு. 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க தேசிய தலைமை அறிவுறுத்திய நிலையில், 10 லட்சம் பேர் வரை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல். உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் தேசிய தலைமை, மாநில தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால், உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க இருப்பதாக தகவல்.

போலியாக வி.ஏ.ஓ. சான்றிதழ் தயாரித்து சமர்ப்பித்த இருவர் கைது

கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதத்திற்காக, வி.ஏ.ஓ. சான்றிதழை போலியாக தயாரித்து சமர்ப்பித்த இருவர் கைது. கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பார்த்திபன் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் பெற்றுள்ளார். ஜாமினுக்கு உத்தரவாதம் அளிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சோலை ராஜன், சுப்பையா இருவரும் போலியாக வி.ஏ.ஓ. சான்றிதழை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர்.

திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. கட்டிட வடிவமைப்பை தயார் செய்ய, ஆலோசகர்களை தேர்வு செய்ய பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. நூலகம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 தளங்கள் கொண்டதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம்

திமுகவைப் பிடிக்காதவர்கள், திமுக கூட்டணியின் கட்டுக்கோப்பைக் கண்டு எரிச்சலடையக் கூடியவர்கள், நம்மையும் அறவே வெறுப்பவர்கள் போன்ற சக்திகள்தான் நமது கூட்டணியை சிதறடிக்கப் பார்க்கிறார்கள். நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக் கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம். உறுதியாகத் தொடர்வோம் என தொண்டர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு, 12 மணி வரை நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.1,30,340 பணம் சிக்கியது. ஜெயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.