மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதே சரியாக இருக்கும்- சென்னை உயர்நீதிமன்றம்!
Madras High Court : தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஷோபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,மனுதாரர் தரப்பில், இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. வேறு இரு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியே இந்த கருத்தை மனுதாரர் தெரிவித்திருந்தார், பெங்களூருவிலும் இது சம்பந்தமாக பதியப்பட்ட வழக்குக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.