தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tasmac Shop : கேட்டது குவார்ட்டர்.. ஆனால் வந்தது பூரான் மிதந்த மது பாட்டில்.. அலட்சியமாக பதில் சொன்ன விற்பனையாளர்!

Tasmac Shop : கேட்டது குவார்ட்டர்.. ஆனால் வந்தது பூரான் மிதந்த மது பாட்டில்.. அலட்சியமாக பதில் சொன்ன விற்பனையாளர்!

Divya Sekar HT Tamil
Jun 12, 2023 11:51 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையில் வாங்கிய மதுபானத்தில் பூரான் கிடந்துள்ளது.

மதுபானத்தில் பூரான்
மதுபானத்தில் பூரான்

ட்ரெண்டிங் செய்திகள்

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது பற்றி அங்கிருந்த விற்பனையாளரிடம் கூறினார். அதற்கு அந்த விற்பனையாளர் சீனாவில் பூரான் முக்கியமான உணவு பொருள். இதனை பெரிதாக நினைக்க வேண்டாம் என அவர் அலட்சியமாக பதில் கூறினார். இவரின் அலட்சியமான பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மது அருந்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அந்த மது பாட்டிலை வாங்கிக் கொண்ட விற்பனையாளர் வேறு பாட்டிலை கொடுத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.விற்பனையாளரின் அலட்சியமான பதிலால் ஆத்திரத்தில் இருந்த அந்த நபர் பூரான் கிடக்கும் மது பாட்டிலை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

அரசு விற்கின்ற மதுபானங்களில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இது குறித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த தற்போது வைரலாகி உள்ளது.

இதே போல சில மாதங்களிக்கு முன்பு திருப்பூரில் மது பாட்டில் வாங்கிய நபர் பாட்டிலுக்குள் ரப்பர் கிடந்தது. திருப்பூர் டிஎம்எஸ் நகர் 2வது வீதியை சேர்ந்த செந்தில் நல்லூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று 190 ரூபாய் மதுபானத்தை 200 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அப்போதை அதை பார்த்தபோது அதற்குள் ரப்பர் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், இது குறித்து டாஸ்மாக் ஊழியரிடம் கேட்ட போது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செந்தில் இது குறித்து தனது நண்பர் குருகணேஷிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இருவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மது பாட்டிலுடன் சென்று, ரப்பர் கிடப்பது குறித்து நியாயம் கேட்டும், முறையாக பதிலளிக்காத டாஸ்மாக் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனு அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்