Tamil Live News Updates:விஜய் 68 பட போஸ்டர் வெளியானது
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates:விஜய் 68 பட போஸ்டர் வெளியானது

Tamil Live News Updates:விஜய் 68 பட போஸ்டர் வெளியானது

HT Tamil Desk HT Tamil
Dec 31, 2023 06:06 PM IST

Tamil Live News Updates: இன்றைய (31.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!

Newyear 2024: நியூசிலாந்து நாட்டில் 2024ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது.  அந்நாட்டில் உள்ள ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து மக்கள்  புத்தாண்டை வரவேற்றனர். 

மதுரையில் விஜயகாந்துக்கு சிலை?

Caption Vijayakanth: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு மதுரை மாநகரில் சிலை வைப்பது தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம் - புதுச்சேரியில் கட்டுப்பாடு

NewYear 2024: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக இன்று இரவு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், இன்று மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி வரையில் அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி கடற்கரைக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டது.

மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காக மருத்துவமனைக்குச் செல்ல செயிண்ட் ஆஞ்சே வீதி, செஞ்சி சாலை, சூர்கூப் வீதி ஆகியவற்றில் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சென்னையில் வானிலை நிலவரம்

Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு

Weather Update: நாளை (01.01.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை எச்சரிக்கை

Weather Update: இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

Weather Update: நேற்று (30-12-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (31-12-2023) அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பனிமூட்டம் நிலவும்

Weather Update: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகாலை சேலான பனிமூட்டம் நிலவும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது

TN Rainfall: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பு அளவான 441.2 மி.மீ பதிவாக வேண்டிய சூழலில், 457.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் - மெரினாவில் சாலைகள் மூடல்

New Year 2024: புத்தாண்டையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகள் மூடப்படுகிறது. இன்று இரவு 7 மணி முதல் கடற்கரை உட்புற சாலை முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

90 ஆயிரம் பேர் தரிசனம்

Sabarimalai: சபரிமலையில் இன்று 90,000 பேர் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 80,000 பேரும், நேரடியாகப் பதிவு செய்த 10,000 பேரும் இன்று தரிசனம் செய்ய ஏற்பட்டிருக்கிறது.

4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Weather Update: தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எண்ணூரில் 5ஆவது நாளாக பொதுமக்கள் போராட்டம்

Ennore: சென்னை எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலை முன்பு 5ஆவது நாளாக பொதுமக்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பெரியகுப்பம், சின்னகுப்பம் கிராம மக்கள் கோரமண்டல் தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த 27ஆம் தேதி ஆலையில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்கள் பலர் மூச்சுதிணறல் ஏற்பட்டு பாதிப்படைந்தனா்.

நகை கடையில் திருட்டு - 3 பேர் கைது

Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் திருடிய கடை ஊழியர்கள் அனீஸ் (29), ஷாலினி (28), அபிஷா(25) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்களிடம் இருந்து ரூ.29.10 லட்சம் மதிப்புள்ள 54 பவுன் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி கொலுசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி அருகே விபத்தில் 3 பேர் பலி

Accident: நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் முறப்பநாடு அருகே லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் ஒரு வயது குழந்தை என 3 பேர் உயிரிழப்ந்தனா். படுகாயமடைந்த 15 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்கள்!

Chennai: சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரையில் நண்பர்களுடன் கடலில் குளித்த்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கி சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (20) என்பவா் உயிரிழந்தார். மேலும் பாலவாக்கம் கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த சக்தி (24) என்பவரும் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளாா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: போக்குவரத்து மாற்றம்

Chennai: 2024 ஆம் ஆண்டு புத்தாண்டையொட்டி பொது இடங்களில் கொண்டாட்டம் நடத்த காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலில் தண்ணீர் கலப்பு

Tambaram: தாம்பரத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் விநியோகம் செய்யப்படும் பெட்ரோலில் தண்ணீர் கலப்பதாக புகார் அளித்து, பொதுமக்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவுகிறது. பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா். 50க்கும் மேற்பட்ட வாகன்ங்கள் பழுதாகியதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Petrol, Diesel Price: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 589 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (டிச.31) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கவனத்திற்கு

CMBT: தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.