Tamil Live News Updates: கோரமண்டல் தொழிற் சாலைக்கு மாசு கட்டுப்பட்டு வாரியம் நோட்டீஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Live News Updates: கோரமண்டல் தொழிற் சாலைக்கு மாசு கட்டுப்பட்டு வாரியம் நோட்டீஸ்

Tamil Live News Updates: கோரமண்டல் தொழிற் சாலைக்கு மாசு கட்டுப்பட்டு வாரியம் நோட்டீஸ்

HT Tamil Desk HT Tamil
Dec 27, 2023 05:58 PM IST

Tamil Live News Updates: இன்றைய (26.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

பிரேக்கிங் நியூஸ்
பிரேக்கிங் நியூஸ்

ஓபிஎஸ்க்கு தண்டனை கிடைப்பது உறுதி

OPS vs EPS: ஓபிஎஸ் மீதான வழக்கு விரைவில் வருகிறது. அந்த வழக்கில் நிச்சயமாக தண்டனை கிடைப்பது உறுதி. ஓபிஎஸ் தனது குடும்பத்தின் மீது நிறைய சொத்து வாங்கி வைத்து இருக்கிறார். நான் முதலமைச்சராக இருந்தவன். எனக்கு எல்லாமே தெரியும். அவர் இதில் முந்திக்கொள்கிறார் - அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் பேட்டி 

கே.எல்.ராகுல் சதம்

SA Vs IND Test: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்தார்

திமுக உடனான தொகுதி பங்கீடு! - டெல்லி தலைமை அழைப்பு

Loksabha Election 2024: திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் உள்ளிட்டோரை டெல்லி மேலிடம் அழைப்பு

வரும் டிச.29 மற்றும் டிச.30 தேதிகளில் டெல்லி ஆலோசனை நடைபெறுகிறது

வெள்ளத்தை முன் கூட்டியே தடுத்து இருக்கலாம்

EPS: தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துச் சொன்னது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை தவிர்த்திருக்கலாம் - கோவையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை

Madurai:மதுரையில் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் கைதான சங்கர நாராயணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மல்யுத்தம் விளையாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

Rahul Gandhi: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்காததால் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக பஜ்ரங் புனியா அறிவித்து இருந்த நிலையில், ஹரியானாவில் அவரை சந்தித்து உரையாடியுள்ளார் ராகுல் காந்தி.

தண்டையார்பேட்டை IOC-ல் பாய்லர் வெடித்து விபத்து - இருவருக்கு காயம்!

Chennai: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஆயில் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததால் இருவருக்கு காயம் ஏற்பட்டது. ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

ஆசிாியர் தேர்வு ஒத்திவைப்பு

TRB Exam: பட்டதாரி ஆசிரியர்/ வட்டார வளமைய ஆசிரியர் தேர்வு மழை பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள்

CM MK Stalin: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.149 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • ரூ.32 கோடி மதிப்பில் விடுதிகள், சமுதாயக் கூடங்களை திறந்து வைத்ததுடன் ரூ.138 கோடி மதிப்பில் புதிய கல்லூரி, விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • நிலமற்றோருக்கு விவசாய நிலம் வாங்க தாட்கோ மூலம் ரூ.10 கோடி மானியத்துடன் கடன் உதவி.
  • தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் இருளர் பழங்குடியினருக்கு 943 புதிய வீடுகளை வழங்கினார்.
  •  பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 776 பயனாளிகளுக்கு ரூ.62 கோடி மதிப்பிலான உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நலம் விசாரித்த அமைச்சா்

Ennore Gas Leak: எண்ணூரில் அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.

வாயு கசிவு ஏற்பட்ட ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவு

Ennore Gas Leak: எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட மாநிலங்களில் இன்று ரெட் அலர்ட்

Red Alert: டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பனி தாக்கம் மிக கடுமையாக இருக்கும். டிசம்பா் 31 ஆம் தேதி வரை மூடு பனியின் தாக்கம் நீடிக்கும். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மிசோரம், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பனியின் தாக்கும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.27) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,200-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.5900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம்

Arudra Darisanam 2023: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு 51 கிலோ புதிய சந்தனம் காப்பு சாற்றப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

எண்ணூரில் வாயு கசிவு

Ennore Gas Leak: சென்னை, எண்ணூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு வாயுக் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “அகரம் காலனி”. செங்குன்றத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று மின்சார விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி லைட்மேன் சண்முகம் உயிரிழந்தார். படுகாயத்துடன் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மண்டல கால பூஜை இன்று நிறைவு!

Sabari Malai: சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவுபெறுகிறது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும், பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறும்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.