தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bjp District President Agoram Arrested For Threatening Darumapuram Adeenam

Adeenam: ஆபாச பட விவகாரம்! தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜக தலைவர் கைது! மும்பையில் பதுங்கியவரை பிதுக்கிய போலீஸ்!

Kathiravan V HT Tamil
Mar 15, 2024 09:41 PM IST

“Darumapuram Adeenam: இந்த வழக்கில் ஏற்கெனவே வினோத், விக்னேச், கொடியரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த அகோரத்தை தலைமைக் காவலர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் அகோரத்தை கைது செய்தனர்”

தருமபுர ஆதீன சுவாமிகள் - பாஜக மாவட்ட தலைவர் அகோரம்
தருமபுர ஆதீன சுவாமிகள் - பாஜக மாவட்ட தலைவர் அகோரம்

ட்ரெண்டிங் செய்திகள்

வழக்கின் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் நிர்வாகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவராக உள்ள அகோரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவல்துறைக்கு அளித்த புகார் மனு விவரம்

அதில், தருமபுரம் ஆதீனம் தலைமை பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் சகோதரலும் உதவியாளரும் ஆவேன் கடந்த சில நாட்களாக ஆடுதுறையை சேர்ந்த வினோத் என்பவர் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாக தொடர்பு கொண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தன்னிடமும், தலைமை மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வனதைளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதீனத்தையும் மடாபதிடையும் அவமானபடுத்தி விடுவதாகவும் தனது சார்பில் திருவெங்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவார் எனவும் பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் மேற்படி விக்னேஷ் மூலம் ரவுகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய் தயங்கமாட்போம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெறுக்கி கொலை செய்ய முயற்சித்தனர்.

பணம் கேட்டு மிரட்டினர்

நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று நடுவதாக தெரிவித்தேன். பின்னார் இது தொடர்பாக கலைமகள் பள்ளி நிறுவனர் கொடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் விஜயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ், ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமல் இருக்கக வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

மன உளைச்சலை ஏற்படுத்தினர் 

மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்னை இல்லாமல் விஷயத்தை முடிக்குமாறும் விணா ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்கள் சொல்வதை செய்ய கூடியவர்கள் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவிடாளர் செந்தில் அவர்களின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றார்கள்.

மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம் எனவே காவல்துறை தலைவர் அவர்கள் மடத்தினர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அதை வெளியிட்டு மடத்திற்கும் மடத்தில் உள்ளவர்களுக்கும் கெட்டப்பெயர் உண்டு பண்ணவும், பணம் கொடுக்காத மடத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவதாகவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

மும்பையில் பதுங்கி இருந்த அகோரம் கைது!

இந்த வழக்கில் ஏற்கெனவே வினோத், விக்னேஷ், கொடியரசு உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  தலைமறைவாக இருந்த அகோரத்தை தலைமைக் காவலர் செல்வம் தலைமையிலான காவல்துறையினர் அகோரத்தை கைது செய்தனர்.  

IPL_Entry_Point