மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

Kathiravan V HT Tamil
Published Dec 22, 2024 05:41 PM IST

இந்த கனகராஜ், அருணன் போன்றவர்களையும் காணோமே?, சொந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு தமிழர் விரோத போக்கை கடைபிடித்தால் கண்டிக்க வக்கற்றவர்கள் இனியும் சுயமரியாதை, கொள்கைனு எல்லாம் கலர்கலரா “ரீல்” விட்டா மக்கள் செஞ்சிடுவாங்க…!

மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!
மருத்துவ கழிவுகள் விவகாரம்! பாஜகவை குறை சொல்லும் சு.வெங்கடேசன் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்தாரா? பாஜக சரமாரி கேள்வி!

திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பிரச்னையாகி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த விவகாரத்தை கண்டித்து இருந்தனர். சட்டவிரோதமாகக் கொட்டிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கேரள அரசுக்கு “தமிழகத்தில் கொட்டப்பட்டுள்ள அனைத்து இயற்கை கழிவுகளையும் உடனடியாக அகற்றி, கேரளாவிற்கு கொண்டு செல்லவும் அல்லது பெற ஏற்பாடு செய்யவும்” உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள அரசு லாரிகளை கொண்டு வந்து அப்புறப்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அண்டார்ட்டிக்காவில் பனி வெடிப்பு நடந்தாலும் பா.ஜ.க-வை குறை சொல்லும் மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்.

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை தினமும் கொட்டிக்கொண்டு இருக்கும் கேடுகெட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை ஏதாவது கண்டித்திருக்கிறாரா?, இந்த கனகராஜ், அருணன் போன்றவர்களையும் காணோமே?, சொந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் அரசு தமிழர் விரோத போக்கை கடைபிடித்தால் கண்டிக்க வக்கற்றவர்கள் இனியும் சுயமரியாதை, கொள்கைனு எல்லாம் கலர்கலரா “ரீல்” விட்டா மக்கள் செஞ்சிடுவாங்க…