தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Inscriptions At Kodumbalur : பொ. செல்வன் மனைவி வானதி பிறந்த கொடும்பாளூர் சிறப்புகள் – கல்வெட்டுகள் கூறுவது என்ன?

Inscriptions at Kodumbalur : பொ. செல்வன் மனைவி வானதி பிறந்த கொடும்பாளூர் சிறப்புகள் – கல்வெட்டுகள் கூறுவது என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 02, 2023 12:56 PM IST

கொடும்பாளூர் வேளிரின் மரபினைக் கூறுச் சாசனம் ஒன்று கொடும்பாளூர் மூவர் கோயிலில் உள்ளது. இது வடமொழிக் கல்வெட்டாகும். கிரந்த எழுத்தில் வெட்டப் பெற்றுள்ளது. தொடக்கமும் இறுதியும் சிதைவுற்றுவிட்டது. இதனைப் 'பூதி விக்கிரமகேசரி' என்ற அரசன் வெட்டியுள்ளார்.

கொடும்பாளூரில் உள்ள கல்வெட்டு
கொடும்பாளூரில் உள்ள கல்வெட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

மொழிபெயர்ப்புப் பின்வருமாறு.

நாதகஜயூதஹர: புராஸித்

யானைகளின் நிரைகளைக் கவர்ந்தவன் முன்பிருந்தான்.

தத்வம்ச்ய: பரவீரஜின் - மளவஜித் ஸ்ரீவீரதுங்கோமுதோ ஜா(த)ஸ்மாத் அதிவீர இத்யநுபமஸ் தஸ்மாதபூத் ஸங்கக்ருத் அஸ்மாத் ஸ்ரீ ந்ருபகேஸரீ விவத்ருதே யோ பால ஏவோரகை: தத்ஸீனு: பரதுர்க்கமர்த்தன இதி க்யாதஸ் ஸ வாதாபிஜித்.

மழவர்களை வென்ற பரவீரஜித் அந்த வம்சத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு அனுபமனான (இணையற்ற) அதிவீரன் பிறந்தான். அவனுக்கு ஸங்கக்ருத் பிறந்தான். வாதாபியை வென்ற பரதுர்க்க மர்த்தனன் என்று புகழ்வாய்ந்த மகனானான்.

தஸ்ய ஸமராபிராம புத்ர ஸித்ராமதேஜஸ. அதிராஜமங்கலாஜௌ யோ நிஜகான சளுக்கிம்

அவனுக்கு இந்திரனை ஒத்த வலிமைவாய்ந்த ஸமராபிராமன் மகன். அவன் அதிராஜமங்கலப்போரில் சளுக்கியரைக் கொன்றான்.

தஸ்யாச்யுதஸ்ய கமலேவ ஸரஸ்வதீவ பத்மோத்பவஸ்ய கிரிஜே(வ) ஹரஸ்ய ஸாக்ஷாத் ப்ரேயஸ்யபூத் அனுபமேதி யதார்த்தநாம்நா ஸ்ரீசோளராஜதுஹிதா யதுவம்சகேதோ

யது வம்சத்தின் கொடி போன்ற அவனுக்கு அச்யுதனுக்குத் திருமகள் போலவும் தாமரையில் தோன்றிய ப்ரஹ்மாவிற்கு சரஸ்வதியைப் போலவும் சிவனுக்குப் பார்வதியைப் போலவும் அனுபமா என்று பொருளோடியையந்த பெயர்கொண்ட சோழ அரசனின் மகள் மனைவியாக இருந்தாள்.

தஸ்யாமஸ்ய பபூவ பூதிரபராம்மீனாம்மளாக்யாம் ததன் ஸ்ரீமான் விக்ரமகேஸரீதி ஸமரே லப்தான்யநாமா க்ருப காவேரீவாரி சோணம் ஸமக்ருதருதிரை: பல்லவஸ்ய த்வஜின்யா: யோ வீரோ:(ரோ) வீரபாண்ட்யம் வ்யஜயத ஸ்மரே

வஞ்சவேளந்தகோபூத்

அந்தச் சோழர் மகளிடத்தில் அவனுக்குப் பூதி மீனாமழவன் (தென்னவர்கோன்) என்னும் பெயரோடு ஓர் அரசன் தோன்றினான். அவன் போர்களில் விக்ரமகேஸரி என்னும் மற்றொரு பெயரை அடைந்தான். அவன் பல்லவர் படைகளின் குருதி கொண்டு காவேரி நீரைச் சிவப்பாக்கினான். அவன் போரில் வீரபாண்டியனை வென்றான். வஞ்சிவேளுக்குக் காலனானான்.

மத்காரீ(த்தாரி) ஸாமஜா(ன்) ஹத்வா வஸன் விக்ரமகேஸரி

கொடும்பாளூப்-புராதீந்த்ர-மாளிகா-விவரோதரே.

அவன் மதம் பிடித்த எதிரியின் யானைகளை அழித்துக் கொடும்பாளூரில் உள்ள இந்திர (கிழக்கு) மாளிகையின் இடை வாழ்கிறான்.

வித்வத்கல்பதரௌ க்ஷிதீச்வரகரத்வந்த்வாம்புஜேந்தௌ புவம் யஸ்மின் சாஸதி மேதிநீ(ம்) ஜயரமாஸ்ரீகீர்த்திவாக்வல்லபே தைக்ஷண்யம் நேத்ரயுகே பு(ப்ரு*)வோஸ்சலநதா கேசேஷு கார்ஷ்ண்யம் தநௌ தந்வி(ந்வீ)நாந் தநுதாபவத் ஸ்தநயுகே சாந்யோந்ய(ஸம்பா) தநம்.

அறிஞர்களுக்குக் கற்பக மரம் போன்றவனும், தாமரையையும், சந்திரனையையும் கரங்களாக உடையவனும், வெற்றிமகள், செல்வம், புகழ், கல்வி முதலானவற்றிற்குத் தலைவனானவனுமான அம்மன்னன் இந்நிலத்தைக் காக்கும்போது அழகிய பெண்களின் கண்களில் கொடுங்கூர்மையும், புருவங்களில் வளைவும், கூந்தலில் கருமையும் இரு கொங்கைகளில் நெருக்கத்தால் மோதலும் உண்டாயின. (மக்களிடையே கொடுங்கூர்மை, வளைவு, கருமை, மோதல் இவை இல்லை என்பது கருத்து.)

தஸ்யாபூத் தேவ்யௌ கற்றளிவரகுணஸமாஹ்வயே ஸத்யௌ கற்றளிரபவத் ஜனனீ பராந்தகாதித்யவர்ம்மணோ கம்ரகம்ராணம்.

அவனுக்குப் பதிவ்ரதைகளான கற்றளி, வரகுணை என்பவர் தேவிகளாக இருந்தனர், அவர்களில் கற்றளி பராந்தகன் ஆதித்யன் என்னும் அழகிய புதல்வர்களுக்குத் தாயானாள்.

ஆத்ரேயகோத்ரஜ: ஸ்ரீமான் மாதுரோ(ந)கேந்த்ர(வேத)பாரக:

வித்யாராசே:தபோராசேஸ் சிஷ்யோ ச்ரஹ்ரு(பூ)ன் மல்லிகார்ஜ்ஜுன:.

ஆத்ரேய கோத்ரத்தில் பிறந்தவரும் மதுரையைச்சேர்ந்தவரும் வேதத்தின் கரையைக் கண்டவரும் கல்விநிதியும் தவத்தின் நிதியுமானவரின் சிஷ்யருமான மல்லிகார்ஜுனர் இருந்தார்.

(ஸ்தாநா (நாம்*))த்ரயம் உத்தாப்ய ப்ரதிஷ்டாப்ய மஹேச்வரம் ஸ்வநாம்னா ப்ரியயோர் நாம்னா ஸோதாத் (தேவோ") ப்ருஹன்மடம்.

அந்த அரசன் தன் பெயராலும், தன் மனைவிகள் பெயராலும் மூன்று கோயில்களை எழுப்பி மஹேச்வரனைப் ப்ரதிஷ்டை செய்து பெரிய மடத்தை அவருக்கு அளித்தான்.

தஸ்மை காலமுகாக்யான-யதிமுக்யாய யாதவ:. ப்ராதாதேகாதச-க்ராம-விநிபந்தம் ப்ருஹன்மடம்

காளாமுகர் என்று அறியப்பட்ட அந்தத் துறவிகளில் சிறந்தவருக்கு யாதவனான அரசன் பதினோரு சிற்றூர்களை உள்ளடக்கிய பெரிய மடத்தை அளித்தான்.

ஐம்பது தபோதனர்களுக்கு உணவளிக்கவும் சிவபெருமானுக்கு நைவேத்யம், வாசனை திரவியம், புஷ்பம், அக்ஷதை, தூபம், தீபம், தாம்பூலம் முதலியவை வழங்கவும் குருவுக்கு அவ்வரசன் பெரிய மடத்தை அளித்தான்.

தகவல் – பார்த்திபன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், திருச்சி.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்