TN Assembly: ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு!’ பேரவையில் மசோதா நிறைவேற்றம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு!’ பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

TN Assembly: ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறை சேர்ப்பு!’ பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

Kathiravan V HT Tamil
Oct 11, 2023 03:35 PM IST

”காவிர் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிப்பதற்கான மசோதா கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டது”

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மயிலாடுதுறை மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

காவிர் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவிப்பதற்கான மசோதா கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வருகின்றன.

புதுக்கீட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணல்மேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி ஆகிய பகுதிகளும், கடலூரில் காட்டுமன்னார் கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிபாளையம், குமராட்சி பகுதிகளும் இந்த வேளாண் மண்டலத்தில் அடங்கும்.

இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு எடுபதற்கான ஆய்வுகளை நடத்தவும், துத்தநாகம், இரும்புத்தாது, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை, இரும்பு, தாமிரம், அலுமினிய உருக்கலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்ட நிலையில், பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலங்களில் மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறி உள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்,

கடலூர் மாவட்டத்தை முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.