Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் Rss

Ooty: ’அடுத்த 100 ஆண்டு திட்டம் என்ன?’ வரும் 13ஆம் தேதி ஊட்டியில் ஆலோசனை நடத்தும் RSS

Kathiravan V HT Tamil
Jul 11, 2023 04:55 PM IST

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.

வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் பங்கேற்கின்றனர்.
வரும் ஜூலை 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் பங்கேற்கின்றனர். (PTI)

பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு நாடு முழுவதும் முழுநேர ஊழியர்கள் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சார செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவது அந்த அமைப்பின் வழக்கமான ஒன்றாக உள்ளது.

வரும் ஜூலை 13ஆம் தேதி அன்று ஊட்டியில் தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் மூன்றுநாள் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்தேயா ஹோசபாலே மற்றும் ஐந்து இணை பொதுச்செயலாளர்களும் கலந்து கொள்வார்கள் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள பிராந்த பிரச்சாரக், சஹ் ப்ராந்த் பிரசாரக், சேஷத்ர பிரசாரக், சஹ சேஷத்ர பிரசாரக், அகில பாரதிய பிரமுக், சஹ் பிரமுக் ஆகிய ஏழு பிரிவுகளை சேர்ந்த பிரச்சாரகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்கள் குறித்தும் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நூற்றாண்டு செயல்திட்டத்தில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.

மேலும் அடுத்த 5 மாதங்களுக்கான நிறுவன நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் ஷாகா செயல்பாடுகள் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.