Annamalai : போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் திமுக தான் - அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai : போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் திமுக தான் - அண்ணாமலை

Annamalai : போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் திமுக தான் - அண்ணாமலை

Divya Sekar HT Tamil
Nov 30, 2022 05:07 PM IST

மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதால் தான்.

மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு.

அடுத்த முறை போதைப் பொருட்களின் ஒழிப்பைப் பற்றி அரசு பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயற்சி செய்தபோது சிக்கிய தன் கட்சிக்காரரைக் குறிப்பிடுவார் என்று நம்புவோம்”எனத் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.