Loksabha Election: ’நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது?’ பாஜக கூட்டத்தில் போட்டு உடைத்த அண்ணாமலை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Loksabha Election: ’நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது?’ பாஜக கூட்டத்தில் போட்டு உடைத்த அண்ணாமலை

Loksabha Election: ’நாடாளுமன்றத் தேர்தல் தேதி எப்போது?’ பாஜக கூட்டத்தில் போட்டு உடைத்த அண்ணாமலை

Kathiravan V HT Tamil
Feb 05, 2024 01:11 PM IST

“Loksabha Election: நமக்கு களம் எப்படி மாறி இருக்கிறது என்பது பாஜக தொண்டணுக்கு தெரியும். 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். எந்தவித அகங்காரமும், கௌரவமும் இல்லாமல் அமைதியான முறையில் பாஜகவினர் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். மாநில அரசை எதிர்த்து நாம் நடத்திய போராட்டங்களுக்காக இங்குள்ள எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தினமும் பாஜக நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறது.  திமுக ஆட்சி வந்ததற்கு பிறகு பாஜக எதிர்க்கட்சியாகவே மாறி எத்தனையோ வேலைகளை செய்துள்ளோம். இதனை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். 

என் மண் என் மக்கள் யாத்திரை 183 தொகுதிகளை தாண்டி உள்ளது.  பாரத பிரதமர் மோடி அவர்களின் திட்டத்தால் பலன்பெற்றவர்களை கண்டுபிடித்து மேடை ஏற்றி உள்ளோம். பல்வேறு முகாம்களையும், சந்திப்புகளையும் நடத்தி வருகிறோம். யாத்திரையின் நிறைவுவிழா பல்லடத்திலே நடத்த உள்ளோம். 

நமக்கு களம் எப்படி மாறி இருக்கிறது என்பது பாஜக தொண்டணுக்கு தெரியும். 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி ஏற்படும் என்பது தெளிவாக தெரிகிறது. 

எம்.எல்.ஏக்களே மணல் கடத்துவது, சாராயம் விற்பது, கட்டப்பஞ்சாயத்து செய்யும் போது மக்கள் யாரிடம் முறையிட முடியும். எங்கே பார்த்தாலும், லஞ்சம் ஊழல் இருந்து வருகிறது. 

இந்த தேர்தலில் இந்தியாவுக்கு ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர் மட்டும்தான் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் மோடி அவர்களை பார்த்த பிறகு தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும், நமது நாட்டுக்கு உள்ள ஒரே ஒரு பிரதமர் மோடி அவர்கள்தான் என்று, ஆட்சி கட்டிலில் அமர ஒரு தகுதி வேண்டும். அது எல்லோரும் போய் உட்காரும் இடம் இல்லை. 

கடந்த 10 ஆண்டுகாலமாக ஒருவொரு நாளும் பிரதமரின் நடவடிக்கைகள் நமக்கு திரும்பத் திரும்ப உணர்த்துவது இந்த நாற்காலியில் உட்கார தகுதி உடையவர் மோடி அவர்கள்தான். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.