Aavin Green Milk Packet : வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது - அன்புமணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Green Milk Packet : வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது - அன்புமணி!

Aavin Green Milk Packet : வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது - அன்புமணி!

Divya Sekar HT Tamil
Dec 03, 2022 05:15 PM IST

பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான். ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது.

பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம்.

வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.