தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ammk Treasurer Trichy Manoharan Joind To Aiadmk In Front Of Eps

Trichy Manoharan: அதிமுகவுக்கு தாவிய அமமுக முக்கிய புள்ளி..அதிர்ச்சியில் டிடிவி தினகரன்!

Karthikeyan S HT Tamil
Apr 23, 2023 12:13 PM IST

Trichy Manoharan: அமமுக பொருளாளரும், முன்னாள் அதிமுக கொறடாவுமான திருச்சி ஆர்.மனோகரன், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார்.

அமமுக பொருளாளர் திருச்சி மனோகரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அமமுக பொருளாளர் திருச்சி மனோகரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவின் முக்கியத் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அமமுகவுக்கு இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றவரும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவரும் அமமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான சேகர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான திருச்சி ஆர்.மனோகரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக பார்க்கப்பட்ட ஆர்.மனோகரன், திருச்சி மாவட்ட செயலாளராகவும், அமமுகவின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது டிடிவி தினகரன் மற்றும் அமமுகவினரை அதிர்ச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.மனோகரன் 2011-2016 காலகட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது முன்னின்று தேர்தல் பணியாற்றிய மனோகரனுக்கு அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரனுடன் அமமுகவில் இணைந்து செயல்பட்ட மனோகரன் 2021 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார்.

அதிமுக யாருக்கு என்ற அரசியல் யுத்தம் ஒருபக்கம், நீதிமன்றத்தில் வழக்குகள் ஒரு பக்கம் என பரபரப்பான அரசியல் சூழலில் அமமுக முக்கிய நிர்வாகிகள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருவது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்