தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

Kathiravan V HT Tamil
Jul 04, 2024 09:42 PM IST

சண்முகம் அவர்கள் ஆரம்ப காலகட்டம் முதல் அதிமுகவில் பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். எல்லா தேர்தல்களிலும் அர்பணிப்போடு பணியாற்றி செயல்பட்ட தொண்டர் அவர் என கம்மிய குரலில் ஈபிஎஸ் வேதனை பேட்டி

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!
ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் சண்முகம் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு கொலை 

அப்போது பேசிய அவர், கட்சி அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சண்முகம் அவர்களை தாக்கி படுகொலை செய்து உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. நெஞ்சை பதற வைக்கும் செயல். அவர் படுகொலை செய்யும் போது வீதியில் உள்ள தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளது. இந்த படுகொலைக்கு காரணம் ஆனவர் சதீஷ், தனலட்சுமி மற்றும் இன்னும் பலர் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.