Masu Vs DJ: ’மக்கு சுப்பிரமணியன் நவபாசாணத்தில் புழுத்த புழு’ மா.சுவை விளாசும் ஜெயக்குமார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Masu Vs Dj: ’மக்கு சுப்பிரமணியன் நவபாசாணத்தில் புழுத்த புழு’ மா.சுவை விளாசும் ஜெயக்குமார்!

Masu Vs DJ: ’மக்கு சுப்பிரமணியன் நவபாசாணத்தில் புழுத்த புழு’ மா.சுவை விளாசும் ஜெயக்குமார்!

Kathiravan V HT Tamil
Aug 22, 2023 06:53 PM IST

"எங்களால் நீ' தேர்வை ஒழிக்க முடியவில்லை'" என்று தமிழக மக்களிடம் நீட் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும்

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்

"நீட் தேர்வு விவகாரத்தால் உயிர் துறந்த 21 பேர் மரணத்திற்கு, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள்தான் காரணம் என்று, தன் நாவை திறந்து நெருப்பைக் கக்கி இருக்கிறார் இந்த மந்திரி சுப்பிரமணியன். நீட்டை ஒழிப்பதற்கு இதய சுத்தியோடு பாடுபட்டவர் மக்களின் முதல்வர் “புரட்சித் தமிழர்'' அண்ணன் எடப்பாடியார் அவர்கள்.

ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரது வாரிசு உதயநிதியும், வாய்ப் பந்தல் போட்டு ஏமாற்றியதன் விளைவுதான் இத்தனை அகால மரணங்கள்.

மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட திமுக-வினர், தங்கள் தவறுகளை மறைப்பதற்கு அடுத்தவர்கள் மீது பழிபோடுவது குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

நவபாஷாணத்தில் புழுத்த புழுவாக நெளித்து, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் மந்திரி சுப்பிரமணியம் தான், அரசு மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களுக்குக் காரணம் என்றால் ஏற்பாரா? காவல் நிலைய மரணங்களுக்கும், என்கவுண்டர்களுக்கும் அந்தத் துறையை கையில் வைத்திருக்கும் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின்தான் காரணம் என்றால் ஏற்பார்களா?

தேர்தல் பரப்புரையின் போது, வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல், புருடா மன்னன் உதயநிதி அவிழ்த்துவிட்ட நிறைவேற்ற முடியாத நீட் ரத்து வாக்குறுதிதான் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். விளையாட்டு மந்திரியின் வினையான பேச்சுக்கள் தான், நம்பிய மக்களை காவு வாங்கி இருக்கிறது.

"எங்களால் நீ' தேர்வை ஒழிக்க முடியவில்லை'" என்று தமிழக மக்களிடம் நீட் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், மக்கு சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாக வாய் நீளம் காட்டினால் "குட்டி குறைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும்" என்று எச்சரிக்கிறேன்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.