தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gandhigram University : காந்தி கிராமம் பல்கலை.யில் எந்த கோர்ஸ்க்கு சேர்க்கை? – விவரங்கள் உள்ளே!

Gandhigram University : காந்தி கிராமம் பல்கலை.யில் எந்த கோர்ஸ்க்கு சேர்க்கை? – விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
May 16, 2023 10:55 AM IST

Gandhigram University : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுநிலை படிப்புகள் தவிர்த்த, பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 19ம் தேதி முதல் உடனடி சிறப்பு துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் மே 15ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அவர்கள் சிறப்பு உடனடி துணைத்தேர்வுகள் எழுத தயாராகி வருகிறார்கள்.

தேர்ச்சிபெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளை நோக்கி படையெடுத்து வருகிறார். இவர்களுக்கு ஆன்லைன் பதிவுகள் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தனியார் கல்லூரிகளிலும், தேர்வுகள் வெளியிட்ட பின்னர் அரசு கல்லூரிகளில் துவங்கி நடைபெற்று வருகிறது.

மற்றொருபுறம் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் நுழைவுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் தேர்வு முடிகளுக்காக காத்திருக்கிறார்கள். இப்படி பரபரப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை விவரங்கள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுநிலை படிப்புகள் தவிர்த்த, பிற வகுப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில், பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்காள 2023 – 24 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை கியூட் (பொது நுழைவுத் தேர்வு) மதிப்பெண் அடிப்படையில் நடக்க உள்ளது. பல்கலையின் மூலம் நடத்தப்படும் பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ, B.voc., D.voc., சான்றிதழ் நிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடக்க உள்ளது. 

இவற்றில் சேர விரும்புவோர், பல்கலைக்கழக இணையதளம் (www.ruraluniv.ac.in) மூலம் விண்ணப்பங்களை ஜூன் 9 வரை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்