Gayathri Raghuram : நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து இடைநீக்கம்!
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
நடிகை காயத்திரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கம்
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு கலங்கம் தெரிவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகுத்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் திருச்சி சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.