தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vijay Wishes Thiruma: திருமாவளவனுக்கு நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து!

Vijay wishes Thiruma: திருமாவளவனுக்கு நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து!

Kathiravan V HT Tamil
Aug 17, 2023 09:51 PM IST

“பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என திருமாவளவன் ட்வீட் ”

நடிகர் விஜய் - விசிக தலைவர் திருமாவளவன்
நடிகர் விஜய் - விசிக தலைவர் திருமாவளவன்

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடிகர் சத்தியராஜ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். இன்று காலை சென்னையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய திருமாவளவன், பாண்டிச்சேரியில் நடைபெறும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ட்வீட் மூலமும் தொலைக்காட்சி பேட்டி மூலமும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திருமவளவனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள திருமாவளவன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்