தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Crime: ரயிலில் செல்போன் பறிப்பு - இளம்பெண் பரிதாப பலி

Chennai Crime: ரயிலில் செல்போன் பறிப்பு - இளம்பெண் பரிதாப பலி

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2023 11:43 AM IST

சென்னையில் பறக்கும் ரயிலில் செல்போன் பறித்த போது தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்தார்.

செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் பொழுது இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பறக்கும் ரயிலில் இளம் பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

ப்ரீத்தி என்ற பட்டதாரி இளம் பெண் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர். இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஜூலை இரண்டாம் தேதியன்று பறக்கும் முறைகளில் பயணம் செய்துள்ளார். அப்போது அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் ப்ரீத்தியின் செல்போனை பறித்துள்ளனர்.

நடைமேடையில் இருந்து ரயில் புறப்பட்ட நேரம் என்பதால் வாலிபர்கள் அந்த செல்போனை பறித்து ப்ரீத்தியின் கையில் இருந்து விழுந்துள்ளனர். அப்போது ப்ரீத்தி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மயக்க நிலைக்குச் சென்ற அவர் சிறிது நேரத்தில் சுயநினைவு இழந்து விட்டார்.

பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் அடையாற்றைச் சேர்ந்த மணிமாறன் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்ரீத்தியின் உயிரிழப்புக்கு இவர்கள்தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இரண்டு பேர் மீதும் வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவத்தில் ஈடுபட்டதன் காரணமாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களிலிருந்து பயணிகளைக் காப்பாற்றுவதற்குக் கண்காணிப்பைத் தீவிரப் படுத்த இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களிலிருந்து பயணிகளைக் காப்பாற்றுவதற்குக் கண்காணிப்பைத் தீவிரப் படுத்த வேண்டுமெனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்