Annamalai Case: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு.. என்ன பிரிவின் கீழ் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Case: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு.. என்ன பிரிவின் கீழ் தெரியுமா?

Annamalai Case: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு.. என்ன பிரிவின் கீழ் தெரியுமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 21, 2024 10:36 AM IST

பேரணியாக செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

Annamalai Case: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு.. என்ன பிரிவின் கீழ் தெரியுமா?
Annamalai Case: பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு.. என்ன பிரிவின் கீழ் தெரியுமா?

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியான கோவை பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணிக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையிலும் காந்திபுரம் பகுதியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த சுமார் 1000 பேர் கூடினர்.

917 பேர் கைது செய்யப்பட்டனர்

 மேடை அமைத்து கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். இதனை தொடர்ந்து பேரணியாக செல்ல முற்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி உள்ளிட்ட 917 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் இவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யும் BNSS 170 பிரிவின் கீழ் காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.