தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  8th Std Public Exam : 8ம் வகுப்பு பொதுத் தேர்வு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு அழைப்பு

8th Std Public Exam : 8ம் வகுப்பு பொதுத் தேர்வு விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு அழைப்பு

Priyadarshini R HT Tamil
Jun 19, 2023 12:10 PM IST

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஜூன் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு 01.08.2023 அன்றைய தேதிப்படி பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் ஜூன் 20ம் தேதி (நாளை) முதல் ஜூன் 28ம் தேதி வரை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் பதிவு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தவேண்டும். மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாட்களில் தேர்வுக் கட்டணத்துடன் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், பள்ளிப்பதிவுத் தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.

இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இந்தத் தேர்வு குறித்த விரிவான தகவல்களை  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். விருப்பமுடையவர்கள் உடனடியாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்ம செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு சுகாதார செவிலியர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

மற்றுமொரு விவரத்தை இந்த செய்தியில் தெரிந்துகொள்ளுங்கள்

புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டுக்கான நர்சிங் சேர்க்கை இந்திய நர்சிங் கவுன்சிலுக்கு 12ம் வகுப்பு வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நர்சிங் சேர்க்கை தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் நடைபெற வேண்டும் என ஐஎன்சி புதுச்சேரி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

இந்த தேர்வுகள் இந்திய நர்சிங் கவுன்சிலின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அரசால் ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதே நேரத்தில் இந்த நர்சிங் சேர்க்கைக்கான தகுதி தேர்வு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

அரசு செவிலியர் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இந்தாண்டு நடைபெற உள்ளதாகவும் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் நர்சிங் திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்