தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  High Court: தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!

High Court: தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 15, 2023 12:12 PM IST

இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனி
தோனி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜி மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால் நூறு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கில் ஜி தொலைக்காட்சி தாக்கல் செய்த பதில் மனுவில் தோனியின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இதை எடுத்து 17 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் அளிக்கும் படி ஜி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக தோனி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி 17 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி ஜி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து ஜி தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதை எதிர்த்து ஜீ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான தோனிக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி செய்தியாக வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டுகளில் துளி அளவும் சந்தேகம் இல்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் ஐபிஎல் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதிபதி முட்கல் குழுவும் கூறவில்லை என குறிப்பிட்டது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது இதுவரை அவகாசம் அளித்தும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் தரப்பில் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்திற்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர் அப்போது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுஅடுத்து இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் மேல்முறையீடு செய்யும் வகையில் 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்