TN CM Stalin: 1400 மழைமானிகள்.. வானிலை அறிய ஆப் - வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பணிகளை முடுக்கிவிட்ட முதலமைச்சர்
TN CM Stalin: 1400 மழைமானிகள்.. வானிலை அறிய ஆப் - வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள பணிகளை முடுக்கிவிட்ட முதலமைச்சர் குறித்துப் பேசுவோம்.
TN CM Stalin: வடகிழக்கு பருவமழையின்போது ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘’வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னாடி பேசும் ஆலோசனைக்கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாம் எந்தவொரு பாதிப்பையும் தடுத்துவிட முடியும்.
மூன்று ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம். அதேபோல, இதுபோன்ற கூட்டங்களையும் நடத்திட்டு வருகிறோம்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என்னும் இரண்டு பருவகாலங்களில் தமிழ்நாட்டுக்கு மழைக்கிடைக்கிறது.
வடகிழக்குப் பருவமழையால் அதிகப்படியான மழை:
இதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழைக்கிடைக்கிறது.
முன்பு எல்லாம் வடகிழக்குப் பருவமழை என்பது பரவலாகப் பெய்தது. சமீப காலமாக, காலநிலை மாற்றம் காரணமாக, வடகிழக்குப் பருவமழை மொத்தமாக பெய்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒரு சில மணிநேரத்திலேயே பருவமழை கொட்டித் தீர்த்துவிடுகிறது. இதை எதிர்கொள்வதுதான் முக்கியமானதாக இருக்கிறது. இந்த மழையினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுறாங்க. அதுமட்டுமல்ல பொதுமக்களின் அவசியத் தேவையான குடிநீர்,சாலை, மின்சாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புவரைக்கும் பெரும்சேதம் ஏற்பட்டிருக்கு. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழைப் பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு திறன்பட்ட செயல்பட்டதின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், இயல்புநிலைக்குத் திரும்புச்சு. அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் களத்தில் இருந்தாங்க.
பாதிப்பு ஏற்பட்டது தெரியாது வகையில் முழுமையாக நாம் நிலைமையைச் சமாளித்தோம். அதுபோல் இந்தாண்டும் பேரிடரை திறன்பட எதிர்கொள்ள நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அவர்கள், செப்டம்பர் 14 மற்றும் 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி கண்காணிப்பாளர்கள் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.
சரியான நேரத்தில் தொடங்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய பாதிப்புகளைத் தடுக்கமுடியும். அதனை நம் அரசு செய்துவருகிறது. வானிலை தரவுகளை உடனுக்கு உடன் வழங்க 22-08-2024 அன்று தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசர கால சேவை மையத்தை நான் திறந்து வைத்தேன். முன்னாடி இருந்த மையத்தோடு ஒப்பிடும்போது, திறன்வாய்ந்த குழுவினரோடு இயங்கி வருகிறது. மேலும் பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படும்வகையில், ஒருங்கிணைப்பு மையத்துடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
அணையின் வெள்ள அபாய எச்சரிக்கை இப்படி செய்தால் தான் சரிசெய்யமுடியும்: முதலமைச்சர்
பெய்த மழையின் அளவை பெய்யும்போதே சரியாக கணித்தால் தான், அணையில் வெள்ள அபாய எச்சரிக்கைப் பணிகளைச் சரியாக செய்யமுடியும். அதற்காக 1400 தானியங்கி மழைமானிகளையும் 100 வானிலை மானிகளையும் நிறுவி, நிகழ்நேரத் தகவல்களைப் பெற்று வருகிறோம்.
முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திற்னாளிகள் ஆகியோரை மழை நேரத்தில் மீட்பது ரொம்ப அவசியம்.
வானிலை, வெள்ள முன்னெச்சரிக்கை, நீர் இருப்பு உள்ளிட்டவற்றை அறிய TN ALERT என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பருவமழையின்போது மீனவர்களுக்கு தேவையான செய்திகள் நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் மழைக்கு முன்பாகவே தங்களது பணிகளைத் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் ஏரி, குளங்களுக்கு மாணவர்கள் செல்வதைத்தடுக்க பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். வெள்ளத்தால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் விரைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என முதலமைச்சர் ஸ்டாலின் வடகிழக்குப் பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.
டாபிக்ஸ்