தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  West Indies Playing Xi: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி மாற்றம்-2வது டெஸ்டில் இளம் வீரருக்கு வாய்ப்பு!

West Indies Playing XI: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி மாற்றம்-2வது டெஸ்டில் இளம் வீரருக்கு வாய்ப்பு!

Manigandan K T HT Tamil
Jul 18, 2023 04:26 PM IST

IND vs WI: டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் தேர்வுக் குழு, பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கெவின் சின்க்ளேருக்கு முதல் வாய்ப்பை வழங்க முடிவு செய்தது.

அறிமுகப் போகும் இளம் வீரர் கெவின் (இடது), வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் (வலது)
அறிமுகப் போகும் இளம் வீரர் கெவின் (இடது), வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் (வலது) (@windiescricket)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் டெஸ்டில் 3-வது வரிசையில் பேட்டிங் செய்து 2 மற்றும் 11 ரன்களை மட்டுமே முறையே 2 இன்னிங்ஸ்களிலும் பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ரேமன் ரெய்ஃபர் இரண்டாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

அதேநேரம், கெவின் சின்கிளெயர் என்ற இளம் வீரருக்கு வாய்ப்பு அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

முதல் டெஸ்டில் இந்தியாவிடம் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட், ஜூலை 20-ம் தேதி டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றத்தை செய்துள்ளார்.

டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் தேர்வுக் குழு, பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் கெவின் சின்க்ளேருக்கு முதல் வாய்ப்பை வழங்க முடிவு செய்தது.

ஆஃப்-ஸ்பின்னரான சின்க்ளேர், 7 ஒரு நாள் போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சின்க்ளேர் 18 முதல் தர போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 29 சராசரியும், பந்துவீச்சில் 23.98 சராசரியும் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசம் ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர், மூன்று போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஒருநாள் அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

ஆஃப்-ஸ்பின்னர் ரகீம் கார்ன்வால் உடல் நலக்குறைவு காரணமாக 2-வது நாள் மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவர் 2-வது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படுவாரா என்பது குறித்து கேள்வி எழுந்தது.

ஆனால், அவரது பெயரும் 2வது டெஸ்டுக்கான அணியில் இடம்பெற்றுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களாக கெமர் ரோச், ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்களாக கார்ன்வால், ஜோமெல் வாரிகன் ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 100-வது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

2வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரெய்க் பிராத்வெயிட் (கேப்டன்), அலிக் அதானஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டகேனரின் சந்தர்பால், ரகீம் கார்ன்வால், ஜோஷுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, கெமர் ரோச், கெவின் சின்கிளேர், ஜோமெல் வாரிகன்.

முன்னதாக, முதல் டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் சுருண்டது.

அதையடுத்து, இந்தியா 421 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் இழந்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் விளாசி அறிமுகப் போட்டியில் அசத்தினார். கேப்டன் ரோஹித் சர்மாவும் சதம் விளாசினார். கோலி அரை சதம் பதிவு செய்தார்.

அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்டுகளை எடுத்து சுழலில் மிரட்டினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்