தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sexual Harassment: பெண் பாலியல் புகார்; ஹரியாணா பாஜக அமைச்சர் மீது வழக்குபதிவு

Sexual Harassment: பெண் பாலியல் புகார்; ஹரியாணா பாஜக அமைச்சர் மீது வழக்குபதிவு

Karthikeyan S HT Tamil
Jan 01, 2023 05:44 PM IST

Haryana sports minister Sandeep Singh: ஹரியாணா விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா அமைச்சர் சந்தீப் சிங்
ஹரியாணா அமைச்சர் சந்தீப் சிங்

ட்ரெண்டிங் செய்திகள்

ஹரியாண மாநிலத்தைச் சேர்ந்த ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர், சண்டிகரில் உள்ள மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் அலுவலகத்துக்கு சென்ற போது தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக வியாழக்கிழமை குற்றம்சாட்டி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சண்டிகர் காவல்துறை தலைமையகத்துக்கு சென்று மூத்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் சண்டிகர் நகர காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி அரோரா ஆகியோரை சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், "ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் என்னை முதலில் உடற்பயிற்சி கூடத்தில்தான் பார்த்தார். எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருந்தததால், அதை சரிபார்க்க நேரில் வரும்படி எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பினார். 

சண்டிகரில் செக்டர் 7-ல் உள்ள தனது வீட்டுக்கு வரும்படி கூறினார். அவ்வாறு நான் சென்றபோது மாலை 6:50 மணியளவில் என்னிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார். மேலும் உன்னைப் பிடித்துள்ளது என கூறி அவர் டி-ஷர்ட்டை கழட்டி என்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் அமைச்சரை தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன்." என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சந்திப் சிங் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில் "எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி இது. என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுகள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என நம்புகிறேன். இந்த விவகாரத்தில் முழுமையான அறிக்கை வரும் வரை எனது விளையாட்டுத் துறையை முதல்வரிடமே ஒப்படைக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது தடகள விளையாட்டு பெண் பயிற்சியாளர் பாலியல் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கியுள்ள சந்தீப் சிங், குருஷேத்ராவின் பெஹோவா தொகுதி எம்எல்ஏ உள்ளார். அவர் தொழில்முறை ஹாக்கி வீரரும் ஆவார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

IPL_Entry_Point

டாபிக்ஸ்