BWF world championships: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!-bwf world championships saina nehwal through second round - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Bwf World Championships: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!

BWF world championships: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 23, 2022 02:03 PM IST

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியா வீராங்கனை சாய்னா நேவால்.

<p>உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்</p>
<p>உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்</p> (AP)

இந்தப் போட்டியில் சாய்னா 21-19, 21-9 என்ற நேர செட்களில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார். சாய்னா தனது அடுத்த போட்டியில் ஜப்பான் வீராங்கனை நெசோமி ஓஹுஹாரா என்பவரை எதிர்கொள்வதாக இருந்தது. முன்னாள் உலக சாம்பியனான ஒஹுஹாரா திடீரென போட்டியிலிருந்து விலகினார். இதன் மூதல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா தகுதி பெற்றார்.

இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி - சிக்கி ரெட்டி ஆகியோரும், கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர் - தனிஷா கிரிஸ்டோ ஆகியோர் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதுவரை நான்கு முறை ஹாங்காங் வீராங்கனை செயுங் கன் யிக்கு எதிராக விளையாடியுள்ள சாய்னா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தார். இதையடுத்து தற்போது நான்காவது முறையாக வெற்றி பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

Whats_app_banner

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.