தமிழ் செய்திகள்  /  Sports  /  Sania Mirza Gives Hope In The Aus Open The Young Indian Player Who Lost In The First Round

Sania Mirza: ஆஸி., ஓபனில் நம்பிக்கை தரும் சானியா..வெளியேறிய இந்திய இளம் வீரர்!

Manigandan K T HT Tamil
Jan 19, 2023 01:57 PM IST

ஆஸ்திரேலியாவில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா (@India_AllSports)

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், கிரீஸ் வீரர்கள் ஸ்டெபனோஸ் டிஸ்டிபாஸும், பெட்ரோஸ் டிஸ்டிபாஸ் ஆகியோரை ராம்குமார் ராமநாதன் இணை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே ஆட்டம் சூடுபிடித்தது. சர்வதேச அளவில் இரட்டையர் பிரிவல் 89ஆவது இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன், 73ஆவது இடத்தில் இருக்கு ஸ்டெபனோஸ் டிஸ்டிபாஸ் இணையை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் ராம்குமார் ராமநாதன் இணை வென்றது. இதையடுத்து, வீறு கொண்டு எழுந்த டிஸ்டிபாஸ் இணை இரண்டாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரு தரப்பு வீரர்களுமே சம பலத்துடன் மோதினர். எனினும் இறுதியில் 6-3 என்ற கணக்கில் டிஸ்டிபாஸ் இணை வெற்றி பெற்றது.

இதையடுத்து, 6-3, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் இந்தியாவைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் தலைமையிலான இணை தோல்வியைத் தழுவி வெளியேறியது.

இதனிடையே, இதனிடையே, முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்ஸா தலைமையிலான இணை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

சானியா வெற்றி

கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து சானியா மிர்ஸா இதில் பங்கேற்றார். எதிர் தரப்பில் ஹங்கேரி வீராங்கனை டால்மா-அமெரிக்க வீராங்கனை பெர்னார்டா பெரா இணையை சானியா இணை எதிர்கொண்டது.

பரபரப்பான ஆட்டத்தில் 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சானியா இணை வென்றது.

நாளை நடைபெறவுள்ள கலப்பு இரட்டை பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ரோகன் போபண்ணா இணை, ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ ஃபோர்லிஸ்-எல்.சவில்லே இணையை எதிர்கொள்கிறது.

மகளிர் இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்ஸா ஆஸி., ஓபனில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து பெல்ஜியம் வீராங்கனை அலிசன்-அன்ஹெலினா (உக்ரைன்) இணையை நாளை இரண்டாவது சுற்றில் சந்திக்கிறது.

WhatsApp channel