தமிழ் செய்திகள்  /  Sports  /  Pakvseng Match Root Finds A Unique Way Of Shining The Ball With The Help Of Leach

PAKvsENG: வழுக்கை தலையில் பந்தை தேய்த்து புதிய யுக்தி: வைரலாகும் ரூட் வீடியோ!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 03, 2022 12:51 PM IST

பந்தை பதப்படுத்த புதிய ரூட்டை கண்டுபிடித்துள்ள ஜோ ரூட்டின் இந்த புதிய ரூட்டை பலரும் கடைபிடிப்பார்கள் என்றே தெரிகிறது.

இங்கிலாந்து வீரர் ரீச் தலையில் வைத்து பந்தை தேய்க்கும் ஜோ ரூட்
இங்கிலாந்து வீரர் ரீச் தலையில் வைத்து பந்தை தேய்க்கும் ஜோ ரூட் (Pakistan Cricket twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

பென்ஸ் ஸ்டோக் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்த நிலையில், பாகிஸ்தான் பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக அந்த அணியில் ஜக் க்ரவ்லி 122 ரன்கள், பென் டக்லெட் 107, ஒல்லி பாப் 108, ஹாரி ப்ராக் 153 ரன்கள் எடுத்து , ஒரே இன்னிங்ஸில் 4 பேர் சதம் அடித்தனர்.

மேலும், இங்கிலாந்து அணி 657 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல தளத்தை ஏற்படுத்தினர். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா ஷபீக் 114 ரன்கள், இம்ரான் உல்ஹாக் 121 ரன்கள் எடுத்து இருவரும் சதம் அடித்தனர்.

இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து பவுலர்கள், ஒரு கட்டத்தில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தனர். அதன் பின் வந்த அசார் அலி 27 ரன்களில் ஆட்டமிழக்க, 3 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 298 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அந்த அணியின் பாபர் அசாம் 28 ரன்களுடனும், ஷகில் ரன் எதுவும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர். இதற்கிடையில், பாகிஸ்தானின் விக்கெட்டுகளை விரைந்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது. இதற்காக பந்தை பதப்படுத்துவதற்காக, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் செய்த செயல், வைரலாகி வருகிறது.

72 வது ஓவரை இங்கிலாந்து வீரர் ராபின்சன் வீச வந்த போது, அவருக்கு பந்து க்ரிப் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், ரூட் இந்த வினோத செயலை செய்தார். வழுக்கை தலையை உடைய இங்கிலாந்து வீரர் ரீச்சின் தொப்பியை கழற்றிய ரூட், அவரது தலையில் பந்தை வைத்து நன்கு தேய்த்தார்.

வழக்கமாக, பேண்ட் அல்லது கை குட்டையில் தான் பந்தை தேய்ப்பதை நாம் பார்த்திருப்போம். முற்றிலும் வித்தியாசமாக, வழுக்கை தலையில் பந்தை தேய்த்து அதை பதப்படுத்திய ஜோ ரூட்டின் செயலை கண்டு, போட்டிக்கு வர்ணனை செய்தவர்கள் கூட சிரித்து பார்த்து மகிழ்ந்தனர். மேலும் வர்ணனையாளர் ஒருவருக்கு தலையில் வழுக்கை இருக்க, அவரது தலையில் சக வர்ணனையாளர் கை வைக்க, அவர்களுக்குள் ஒரே கலாட்டா செய்து கொண்டனர்.

பந்தை பதப்படுத்த புதிய ரூட்டை கண்டுபிடித்துள்ள ஜோ ரூட்டின் இந்த புதிய ரூட்டை பலரும் கடைபிடிப்பார்கள் என்றே தெரிகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்