தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Mlc 2023: பறிபோன பொன்னான வாய்ப்பு! தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்

MLC 2023: பறிபோன பொன்னான வாய்ப்பு! தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 26, 2023 11:18 AM IST

கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று குவாலிபயர் 1 போட்டியில் விளையாட வாய்ப்பு இருந்த நிலையில் அதை தவறவிட்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி. அதே சமயம் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிரடியாக பேட் செய்த சதமடித்த சியாட்டில் ஓர்க்காஸ் பேட்ஸ்மேன் கிளாசன்
அதிரடியாக பேட் செய்த சதமடித்த சியாட்டில் ஓர்க்காஸ் பேட்ஸ்மேன் கிளாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இருந்தது மும்பை அணி. ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டது மும்பை அணி.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக பேட் செய்து 7 சிக்ஸர்களை பறக்க விட்டதுடன் 68 ரன்கள் எடுத்தார். கேப்டன் கைரன் பொல்லார்டு 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து சிறப்பாக பினிஷ் செய்தார்.

இதையடுத்து 195 ரன்களை சேஸ் செய்த சியாட்டில் ஓர்காஸ் அணி 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கால்சன் சதமடித்தார். 44 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 5 போட்டிகளில் 4இல் வெற்றி பெற்று சியாடில் ஓர்காஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடித்துள்ளது. மும்பை அணி 5 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று, முக்கியமான இந்த போட்டியில் தோல்வியை தழுவியபோதிலும் ரன்ரேட் அடிப்படையில் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ப்ளேஆஃப் போட்டிகள் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் வாஷிங்டன் ப்ரீடம் - மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு தொடங்குகிறது.

இதன்பின்னர் இரண்டாவது போட்டி சியாடில் ஆர்காஸ் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்