தமிழ் செய்திகள்  /  Sports  /  Jadeja: 'Rockstar' Who Has Taken 5 Wickets In Every Innings So Far In Tests!

Jadeja:இது முதல்முறையல்ல.. டெஸ்டில் 5 விக்கெட்டுகளை இத்தனை முறை வீழ்த்திய ஜடேஜா!

Manigandan K T HT Tamil
Feb 19, 2023 11:54 AM IST

Ind vs Aus 2nd Test: முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் 2வது இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

'Rockstar' ஜடேஜா
'Rockstar' ஜடேஜா (REUTERS)

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று நடைபெற்றுவரும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஜடேஜாவின் சுழல் ஜாலம் கைகொடுத்தது. 4 முதல் 5 மாதங்களாக காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி ஓய்வில் இருந்த ஜடேஜா, தனது உடல்தகுதியை நிரூபித்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிலும் 2வது இன்னிங்ஸிலும் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

அந்த ஆட்டத்தில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி கண்டது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.

ஷமி 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கவாஜா அதிகபட்சமாக 81 ரன்கள் விளாசினார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 83.3 ஓவர்களில் 262 ரன்களில் ஆட்டமிழந்தது.

அக்ஸர் படேல் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸி., பவுலர் லயன் 5 விக்கெட்டுகளை சுருட்டினார்.

1 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. நேற்றே உஸ்மான் கவாஜாவை ஜடேஜா வீழ்த்தினார். டிராவிஸ் ஹெட், மார்னஸ் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்றுவரும் 3வது நாள் ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி ஆஸி., வீரர்களின் விக்கெட்டுகளை அள்ளினர். லபுஸ்சேன், ஹேண்ட்காம்ப், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரே, கேப்டன் கம்மின்ஸ், லயன், குனேமேன், கவாஜா ஆகிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதுவரை டெஸ்டில் 12 போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து முறை தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜடேஜா.

WhatsApp channel

டாபிக்ஸ்