தமிழ் செய்திகள்  /  Sports  /  Most Sixes For Csk In This Season Indian Premier Leauge 2023

Most Sixes For CSK: இந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்!

Manigandan K T HT Tamil
May 31, 2023 01:36 PM IST

Chennai Super Kings: ‘உங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் நேச்சுரல் கேமை விளையாடுங்கள். நீங்கள் நிச்சயம் நன்றாக விளையாடுவீர்கள்’

பைனல் போட்டியில் ஷிவம் துபே மற்றும் ஜடேஜா
பைனல் போட்டியில் ஷிவம் துபே மற்றும் ஜடேஜா (IPL Twitter)

ட்ரெண்டிங் செய்திகள்

எம்.எஸ்.தோனி பெரிய அளவில் ஸ்கோர் பதிவு செய்யவில்லை என்றாலும் ஒட்டுமொத்த அணியையும் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தியது அவர் தான்.

இளம் வீரர்களுக்கு மன அழுத்தம் இருக்கக் கூடாது என அனைத்து மன அழுத்தங்களையும் தன் மீது போட்டுக் கொண்டு வழிநடத்தியதை நாம் அறிவோம்.

அந்த வகையில் சிஎஸ்கேவில் தொடக்க வரிசையில் களம் புகுந்த அதிரடி காட்டிய ஷிவம் துபே பைனல் போட்டியில் கடைசி வரை ஜடேஜாவுக்கு தோள் கொடுத்தார்.

அவர் கூறியதாவது:

கேப்டன் தோனி மிகவும் ஆதரவாக இருந்துவந்தார். உங்கள் ஆட்டத்தை விளையாடுங்கள். ‘உங்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்கள் நேச்சுரல் கேமை விளையாடுங்கள். நீங்கள் நிச்சயம் நன்றாக விளையாடுவீர்கள்’ என என்னிடம் தோனி கூறினார். அவருக்கும், ஒட்டுமொத்த சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றார் ஷிவம் துபே.

சிஎஸ்கேவுக்காக இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் ஷிவம் துபே. அவர் 35 சிக்ஸர்களை விளாயிருக்கிறார்.

அதேபோல், சிஎஸ்கேவுக்காக மீக நீண்ட தூரத்துக்கு சிக்ஸரை விரட்டி வீரரும் ஷிவம் துபேதான். 102 மீட்டருக்கு சிக்ஸரை பறக்கவிட்டார் ஷிவம் துபே.

அதிக பவுண்டரிகளை சிஎஸ்கேவுக்காக டெவன் கான்வே விரட்டினார். அவர் மொத்தம் 77 பவுண்டரிகளை விளாசினார்.

அதேபோல், மொத்தம் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷிவம் துபே 6 கேட்ச்களை பிடித்தார். மொத்தம் 418 ரன்களை விளாசியிருக்கிறார்.

சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே
சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே (AP)

சிஎஸ்கேவுக்காக இந்த சீசனில் அதிக ஸ்கோர் பதிவு செய்த மூன்றாவது வீரர் ஷிவம் துபே.

29 வயது ஆகும் துபே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். ஆர்சிபி, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக இதற்கு முன் விளையாடியிருக்கிறார்.

தற்போது சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்