தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ms Dhoni Injury: தோனிக்கு காயம்! என்ன சொல்கிறார் பயிற்சியாளர் பிளெமிங்

MS Dhoni Injury: தோனிக்கு காயம்! என்ன சொல்கிறார் பயிற்சியாளர் பிளெமிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2023 11:27 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களான தீபக் சஹார், பென் ஸ்டோக்ஸ், சிமர்ஜீத் சிங் ஆகியோர் காயம் காரணமாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் தோனி அதை சமாளித்து விளையாடி வருவதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

பயிற்சியின் போது சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்  மற்றும் அணி கேப்டன் எம்எஸ் தோனி
பயிற்சியின் போது சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் அணி கேப்டன் எம்எஸ் தோனி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

கடைசி 3 பந்தில் 7 ரன்கள் தேவை என்று இருந்தபோது வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. சிக்ஸர்களாக பறக்கவிடும் தோனி, இதுபோன்ற தருணங்கள் 2 ரன்கள் ஓடி எடுப்பதிலும் தவறியதில்லை. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் தோனி ரன் ஓடுவதில் ரிஸ்க் எடுக்காமல் இருந்தார்.

ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் போட்டி தொடங்குவதற்கு முன்னரே தோனி மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் தோனி போட்டியில் களமிறங்கினார். இதைத்தொடர்ந்து லக்னெள, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடினார்.

மூட்டு வலியை சமாளித்து அவர் தொடர்ந்து விளையாடி வந்தாலும், அவரது காயத்தின் தன்மை குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தெரிவிக்காமலேயே இருந்து வந்தது.

இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங்கிடம் தோனிக்கும் ஏற்பட்டிருக்கும் காயத்தின் தன்மை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே தோனி அணியில் இணைத்துகொண்டார். அவர் அப்போது முழு உடற்தகுதியுடனே இருந்தார். ராஞ்சியில் அவர் வலை பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஆனாலும் சென்னை வந்த பின்னர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார். தனது பேட்டிங் பார்மை தொடர்வதற்கான முழு பணியிலும் ஈடுபட்டார். அவர் சிறப்பாக விளையாடி வருவதை எல்லோரும் கண்கூடாக பார்த்துள்ளீரகள்.

எனவே தனக்கு ஏற்பட்டிருக்கும் மூட்டு வலி பாதிப்பை எப்படி சமாளிப்பது என்பது அவருக்கு நன்கு தெரியும். விரைவில் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் தன்மை அவருக்கு உண்டு" என்றார்.

இதையடுத்து மற்ற வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் நிலைமை குறித்து அவர் கூறியதாவது:

தென்ஆப்பரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சிசண்டா மகாலா, 2 ஓவர்கள் மட்டும் பந்து வீசி விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அவர் இரண்டு வாரம் வரை விளையாடமாட்டார். தொடை பகுதி தசை பிடிப்பு காரணமாக காயமடைந்துள்ள தீபக் சஹார் மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை விளையாட முடியாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடியபோது ஏற்பட்ட காயத்தால் சிமர்ஜீத் சிங்கும் களமிறங்க முடியாது. பென் ஸ்டோக்ஸ் உடல்நிலை நாளுக்கு நாள் தீவிரமாக கண்காணிக்கப்ட்டு வருகிறது.

இதை வைத்து பார்க்கையில் மற்றொரு முக்கிய வீரர்களை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே குறைவான ஆப்ஷன்களை வைத்து அடுதடுத்த போட்டிகளில் களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு புறம் சிக்ஸர், பவுண்டரிகள் என ரன்குவிப்பில் ஈடுபட்ட தோனி 2 ரன்கள் எடுப்பதை கூடுமான வரையில் தவிர்த்தார். அப்போது வர்ணனையாளர்களான ரவி சாஸ்த்ரி, மாத்யூ ஹெய்டன் ஆகியோர் இதுபற்றி குறிப்பிட்டனர். இந்த சூழ்நிலையில் தோனி காயம் குறித்து சிஎஸ்கே வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து ராஜ்ஸதான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்