தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ravichandran Ashwin:இளம் பெளலர்களை கண்டறியும் சிறப்பு முகாம் - அஸ்வின் தொடக்கம்

Ravichandran Ashwin:இளம் பெளலர்களை கண்டறியும் சிறப்பு முகாம் - அஸ்வின் தொடக்கம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 27, 2023 12:01 PM IST

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திறமையான பந்து வீச்சாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் திட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் பெளலர்களை கண்டறியும் சிறப்பு முகாமை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் பெளலர்களை கண்டறியும் சிறப்பு முகாமை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடங்கி வைத்தார்

ட்ரெண்டிங் செய்திகள்

சிறந்த இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமையை மெருகேற்றும் விதமாக உருவாக்கியுள்ள இந்த திட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் பேசும்போது கூறியதாவது: "வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் காணுவதற்கான சிறப்பு தேர்வு முகாம் 13 மாவட்ட மையங்களில் நடைபெறுகிறது. 14 மற்றும் 24 வயதுக்கு உள்பட்ட வீரர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் கடந்த 3 ஆண்டுகளாக எந்த வயது பிரிவிலும் ஒருங்கிணைந்த மாவட்ட அணிகளுக்காக விளையாடி இருக்கக்கூடாது.

இந்த திட்டத்தில் அடையாளம் காணப்படும் சிறந்த பந்து வீச்சாளர் சர்வதேச போட்டியில் ஆடும் அளவுக்கு அவரது திறமை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும். ஏழ்மை நிலையில் உள்ள வீரர்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அவர்களுக்கு உதவி தொகை வழங்க ஸ்பான்சர் ஏற்பாடு செய்யப்படும்.

சென்னை தவிர தேனி, திருப்பூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சேட்டிலைட் மையங்கள் உருவாக்கப்படுகிறது. இதில் தேனி, திருப்பூர் ஆகியவை அதிக திறன் கொண்ட சேட்டிலைட் மையங்களாக இருக்கும்.

ஏற்கனவே டிஎன்பிஎல் லீக் மைதானங்களான திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை ஆகியவற்றில் உள்ள வசதிகள், விழுப்புரம் மைதானத்ததில் உள்ள வசதியும் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.

தமிழக அணி கடைசியாக 1988ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையை வென்றது. அதன் பிறகு இதுவரை கோப்பையை வெல்லவில்லை. அந்த குறையை போக்க வேண்டும். நானும் இந்த திட்டத்துக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

 

இளம் பந்துவீச்சாளர்களை கண்டறியும் இந்த தேர்வு முகாம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்