HBD Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி..ஏராளமான சர்வதேச பதக்கங்கள்! இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ்-india star squash player joshna chinappa celebrating her birthday today - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Hbd Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி..ஏராளமான சர்வதேச பதக்கங்கள்! இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ்

HBD Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி..ஏராளமான சர்வதேச பதக்கங்கள்! இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 15, 2024 06:00 AM IST

HBD Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி, ஏராளமான சர்வதேச பதக்கங்கள் என இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ் ஆக திகழ்ந்து வருகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா.

HBD Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி..ஏராளமான சர்வதேச பதக்கங்கள்! இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ்
HBD Joshna Chinappa: அதிக முறை தேசிய சாம்பியன்ஷிப் வெற்றி..ஏராளமான சர்வதேச பதக்கங்கள்! இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ்

ஜோஷ்னாவின் ஸ்குவாஷ் பயணம்

சென்னையில் பிறந்து வளர்ந்கு கர்நாடகா மாநிலம் குடகு மழையை பூர்வீகமாக கொண்டவர் ஜோஷ்னா சின்னப்பா. இவரது தந்தை, தாத்தா ஆகியோர் ஸ்குவாஷ் விளையாட்டு வீரர்களாக இருந்துள்ளனர்.

தனது ஏழாவது வயதில் ஸ்குவாஷ் விளையாட்டை விளையாட தொடங்கியுள்ளார் ஜோஷ்னா. அவரது தந்தை தமிழ்நாடு ஸ்குவாஷ் அணிக்காக விளையாடியதுடன், ஜோஷ்னாவின் முதல் பயிற்சியாளராகவும் திகழ்ந்தார்.

ஸ்குவாஷ் விளையாட்டில் ஜோஷ்னாவின் பட்டங்கள்

2000ஆவது ஆண்டில் தேசிய அளவிலான ஜூனியர், சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று, இளம் வயதில் இந்த பட்டத்தை வென்றவர் என்ற சாதனை புரிந்தார். மேற்கூறிய பட்டங்களை வெல்லும்போது ஜோஷ்னா 14 வயது நிரம்பிய டீன் ஏஜ் பெண்ணாக இருந்தார்.

2003இல், யு17 பிரிவில் பிரிட்டீஷ் ஜூனியர் ஓபன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். இதற்கு அடுத்த ஆண்டில் யு19 பிரிவில் இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றார்.

2005இல் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் விளையாடி இறுதிப்போட்டி வரை தகுதி பெற்றார்.

2010இல் ஜெர்மன் லேடிஸ் ஓபன், 2012இல் காயமடைந்து 7 மாத ஓய்வுக்கு பின் கம்பேக் கொடுத்து சென்னை ஓபன் தொடரில் WISPA பட்டம் , 2014இல் விண்டர் கிளப் பெண்கள் ஓபன் என ஸ்குவாஷ் விளையாட்டில் பல்வேறு தொடர்களில் பட்டங்களை வென்றார்.

முதல் காமன்வெல்த் பதக்கம்

2014இல் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா மற்றும் தீபிகா பல்லீகல் ஜோடி தங்கம் வென்றது. இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியன் ஓபன் தொடர், NSCI ஓபன் பட்டங்களை வென்றார். 2015ஆம் ஆண்டில் மற்றொரு ஸ்டார் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லீகளை பின்னுக்கு தள்ளி உலக அளவில் 13வது ரேங்க் பிடித்தார்.

தொடர்ந்து 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஒற்றையர், இரட்டையர் ஸ்குவாஷ் போட்டிகளில் பல பட்டங்களை வென்றார்.

ஸ்குவாஷ் விளையாட்டில் தீபிகா பல்லீகல் - ஜோஷ்னா சின்னப்பா இடையே கடும் போட்டி நிலவியுள்ளது. இருவரும் மாறி மாறி பதக்கங்கள் வென்று இருப்பதோடு, இருவரும் இணைந்து பல போட்டிகளில் களமிறங்கி இந்தியாவுக்கு ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.

கடைசியாக இந்த ஜோடி கடந்த 2022இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலக டபுள்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்றனர்.

18 பட்டங்களுடன் அதிக தேசிய சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றிருக்கும் வீராங்கனை என்ற பெருமை பெற்றிருக்கும் ஜோஷ்னா, இந்தியா அரசால் குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்த ஆண்டில் வென்றார். சர்வதேச அளவில் 5 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று இந்தியாவின் ஸ்குவாஷ் எக்ஸ்பிரஸ் ஆக திகழ்ந்து வரும் ஜோஷ்னா சின்னப்பாவுக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.