Asian Games 2023: ஸ்குவாஷ் கலவை இரட்டையர் பிரிவில் தங்கம்! வரலாறு படைத்தது இந்திய ஜோடி
ஸ்குவாஷ் விளையாட்டில் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய ஜோடி தீபிகா பல்லீகல், ஹரீந்தார் பால் சிங் ஜோடி தங்கம் வென்றுள்ளது.
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள் 12வது நாளான இன்று, ஸ்குவாஷ் விளையாட்டு கலவை இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் கலவை இரட்டையர் என்ற சாதனையை தீபிகா பல்லீகல் மற்றும் ஹரீந்தர் பால் சிங் சாதனை புரிந்துள்ளது.
மலேசியாவின் ஐஃபா பின்டி அஸ்மான் மற்றும் முகமது கமல் ஜோடிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-10, 11-10 என புள்ளிகள் பெற்று நேர் செட்களில் வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டு மகளிருக்கான அணி போட்டியில் வெண்கலம் மற்றும் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் தங்கம் என இரண்டு பதக்கங்களை வென்று தீபிகா பல்லீகல் அசத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்