தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Harmanpreet Kaur: களத்திலும், களத்தின் வெளியேயும் மோசமான நடத்தை! ஹர்மன்ப்ரீத்துக்கு கிடைக்கப்போகும் தண்டனை

Harmanpreet Kaur: களத்திலும், களத்தின் வெளியேயும் மோசமான நடத்தை! ஹர்மன்ப்ரீத்துக்கு கிடைக்கப்போகும் தண்டனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 25, 2023 11:56 AM IST

ஐசிசி நடத்தை விதிமுறை லெவன் 2ஆம் நிலை மீறி முதல் பெண் கிரிக்கெட்டராக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். அவருக்கு இரண்டு போட்டிகளை வரை விளையாட தடை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப்படம்)
இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இத்தோடு நில்லாம் போட்டி முடிந்த பிறகு பரிசு வழங்கும் நிகழ்விலும் அம்யர்களின் முடிவை கடுமையாக விமர்சித்த அவர், தொடர் சமநிலையில் முடிந்த நிலையில் கோப்பை வாங்கும்போது வந்த வங்கதேச மகளிர் அணி கேப்டனிடம், நீங்கள் தொடரை சமன் செய்யவில்லை. அம்பயரையும் வர சொல்லுங்கள் என்று கடுமையாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், ஹர்மன்ப்ரீத் கெளர் செயலுக்கு பலரும் கடுமயான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து களத்தின் உள்ளேயும், களத்துக்கு வெளியேயும் ஹர்மன்ப்ரீத் கெளர் வெளிப்படுத்திய தனது நடத்தைக்காக நான்கு குறைபாடு புள்ளிகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் ஐசிசி நடத்தை விதிமீறல் லெவல் 2இல் ஈடுபட்ட முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என மோசமான பெயரை பெற வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளின் நடத்தை பற்றி கூறும் விதமாக அமைந்திருக்கும் விதிமுறைகளில் லெவல் 2 குற்றச்சாட்டு ஹர்மன்ப்ரீத் கெளர் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஹர்மீன்ப்ரீத் விஷயத்தில் ஸ்டம்பகளை பேட்டால் அடித்து சேதப்படுத்தியது, அம்பயர் மீது பழி சுமத்தியது, போட்டி முடிந்த பின்னர் பரிசளிக்கும் நிகழ்வில், அம்பயரின் செயல்பாட்டை விமர்சித்தது, பரிதாபத்துக்குரியதாக்கியது போன்ற நடத்தை விதி மீறலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து போட்டி ரெப்ரி உள்பட அதிகாரிகள் விளையாட்டு சாதனங்களை சேதப்படுத்தியதற்கு மூன்று குறைபாடு புள்ளிகள், பொதுமக்கள் முன்னிலையில் அம்பயரை விமர்சித்ததற்காக ஒரு குறைபாடு புள்ளி குறைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவை ஐசிசி தான் எடுக்கும் என தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசியிடன் பேச்சவார்த்தையில் பிசிசிஐ ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி விதிமுறைப்படி, நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குறைப்பாடு புள்ளிகளை 24 மாத காலத்தில் ஒரு வீரர் அல்லது வீராங்கனை பெற்றால், அது இடைநீக்கத்துக்கான புள்ளியாக மாறப்படும். அதேபோல் 4 முதல் 7 புள்ளிகளை பெற்றால் அது இரண்டு இடைநீக்கத்துக்கான புள்ளகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

இடைநீக்கம் புள்ளிகளை பெறுவோருக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒரு நாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும். அந்த வகையில் ஹர்மன்ப்ரீத் கெளர் இரண்டு போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படுவார் என தெரிகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்