தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Isl Playoffs: மங்காத்தா அஜித் போல் கடைசி அணியாக ப்ளேஆஃப் சென்ற சென்னையின் எஃப்சி! அட்டவணை அறிவிப்பு

ISL Playoffs: மங்காத்தா அஜித் போல் கடைசி அணியாக ப்ளேஆஃப் சென்ற சென்னையின் எஃப்சி! அட்டவணை அறிவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 05:44 PM IST

கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ப்ளேஆஃப் அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையின் எஃப்சி அணி வீரர்கள்
சென்னையின் எஃப்சி அணி வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்னும் ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிபோட்டி மீதமிருக்கும் நிலையில் அதற்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

ஐஎஸ்எல் 2023-24 லீக் சுற்று போட்டிகள் வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 19ஆம் தேதி ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

அதன்படி மும்பை சிட்டி எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் ஆகிய அணிகள் டாப் இரண்டு இடங்களை பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து 3 முதல் 6 வரையிலான இடங்களில் முறையே கோவா, ஒடிசா, கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எஃப்சி ஆகிய அணிகள் உள்ளன.

ப்ளேஆஃப் அட்டவணை

முதல் இரண்டு இடத்தை பிடித்த அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டியில் பங்கேற்கும். 3 முதல் 6 இடங்களில் இருக்கும் நான்கு அணிகளுக்கு இடையே நாக்அவுட் போட்டி நடைபெறும்.

இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரையிறுதி போட்டியில் டாப் 2 இடத்தை பிடித்திருக்கும் அணிக்கு எதிராக மோதும்.

முதல் நாக்அவுட் போட்டி ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாவது நாக்அவுட் ஏப்ரல் 20ஆம் தேதியும் நடைபெற இருக்கின்றன.

இரண்டு லெக்கில் நடைபெறும் அரையிறுதி போட்டி

நாக்அவுட்டில் வெல்லும் அணிகள் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு எதிராக அரையிறுதி போட்டியில் விளையாடும். அரையிறுதி இரண்டு லெக்குகளாக, அதாவது இரு அணிகளின் உள்ளூரில் நடைபெறும்.

இதில் முதல் லெக் அரையிறுதி ஆட்டம் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளிலும், இரண்டாவது லெக் அரையிறுதி ஆட்டம் ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டி மே 4ஆம் தேதி நடைபெறும். இதில் இந்த சீசனின் சாம்பியன் யார் என்பது தெரியவரும்.

சென்னையின் எஃப்சி

இந்த சீசனில் கடைசி அணியாக சென்னையின் எஃப்சி ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை விளையாடிய 21 போட்டிகளில் 8 வெற்றி, 10 தோல்வி, 3 டிராவுடன் 27 புள்ளிகளை பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

ஐஎஸ்எல் கால்ப்ந்து தொடர் 2014இல் தொடங்கப்பட்டது. இதன் பின்னர் 2015, 2017 ஆகிய சீசன்களில் சென்னையின் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2019 சீசனில் ரன்னர் அப் பட்டத்தை வென்றது. கடந்த சீசனில் 8வது இடத்தை பிடித்த சென்னையின் எஃப்சி இந்த முறை ப்ளேஆஃப் வரை முன்னேறியுள்ளது.

மூன்றாவது முறை இந்த முறை சென்னையின் எஃப்சி கோப்பை வெல்லுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியுள்ளது.

சென்னையின் எஃப்சி தனது கடைசி லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணியை ஏப்ரல் 14ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்