August Sports Rewind: முத்திரை பதித்த நீரஜ் சோப்ரா, இந்திய ஆக்கி அணி சாம்பியன்.. மேலும் பல முக்கிய நிகழ்வுகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  August Sports Rewind: முத்திரை பதித்த நீரஜ் சோப்ரா, இந்திய ஆக்கி அணி சாம்பியன்.. மேலும் பல முக்கிய நிகழ்வுகள்

August Sports Rewind: முத்திரை பதித்த நீரஜ் சோப்ரா, இந்திய ஆக்கி அணி சாம்பியன்.. மேலும் பல முக்கிய நிகழ்வுகள்

Manigandan K T HT Tamil
Aug 31, 2023 09:05 AM IST

ஆகஸ்ட் மாதத்தில் விளையாட்டில் நடந்த சுவாரசியமான செய்திகளின் தொகுப்பு.

ஆகஸ்ட் மாத ரவுண்ட் அப்
ஆகஸ்ட் மாத ரவுண்ட் அப்

ஆகஸ்ட் 2- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வசப்படுத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னையில் இன்று தொடங்கிறது.

ஆகஸ்ட் 3- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி போட்டியை அட்டகாசமாக தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட்-4 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆக்கி போட்டியில் இந்தியா-ஜப்பான் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆகஸ்ட்-5 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை

ஆகஸ்ட்-6 வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆகஸ்ட்-7 உள்நாட்டு ரசிகர்களின் மத்தியில் உலகக்கோப்பையை வெல்வோம் என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக வெட்டோரி நியமனம்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாமுக்கு மீண்டும் தேர்வு குழு தலைவர் பதவி

ஆகஸ்ட் -8 3-வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தியது. சூர்யகுமார் யாதவ் 83 ரன்கள் குவித்தார்.

ஆகஸ்ட்-9 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை விரட்டியது.

ஆகஸ்ட் -1௦ இந்திய சப்-ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக சர்தார் சிங், ராணி நியமனம்.

ஆகஸ்ட் -11 4-வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அமெரிக்காவில் இன்று மோதுகின்றன.

ஆகஸ்ட் -12 வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது 2௦ ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆகஸ்ட்-13 சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிச்தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட்-14 கனடா ஓபென் டென்னிசில் இத்தாலி வீரர் சின்னெர், அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.

ஆகஸ்ட்-15 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்றது.

ஆகஸ்ட்-16 இந்தியாவில் முதல் முறையாக சாலையில் நடக்கிறது: சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்.

ஆகஸ்ட்-17 உலக தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவராக சுமரிவாலா தேர்வு

ஆகஸ்ட்-18 சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டு நிறைவு: ரன்னுக்காக 51௦ கிலோமீட்டர் ஓடிய விராட் கோலி

ஆகஸ்ட்-19 உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய அணிகள் தங்கப்பதக்கம் வென்றன.

ஆகஸ்ட்-20 பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆகஸ்ட்-21 உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து பிரக்ஞானந்தா சாதனை

ஆகஸ்ட் -22 ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆப்கானில் தானை 59 ரன்னில் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி

ஆகஸ்ட்-23 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.

ஆகஸ்ட் -24 உலக தடகளத்தில் பெண்களுக்கான போல் வால்ட்டில் அமெரிக்காவின் மூனும், ஆஸ்திரேலியாவின் நினாவும் தங்கப்பதக்கத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்

ஆகஸ்ட்-25 உலக தடகள சாசாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 634 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

ஆகஸ்ட்-26 உலக பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் பிரனாய் தோல்வி வெண்கலப்பதக்கம் பெற்றார்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான் அணி தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது.

ஆகஸ்ட்-27 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது

ஆகஸ்ட்- 28 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எத்தகைய மனநிலையில் தயாரானேனோ அதே போன்று இப்போது தயாராக விரும்புவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்வியாடெக் எளிதில் வெற்றி

ஆகஸ்ட் 30-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தானின் முல்தானில் முதல் ஆட்டத்தில் நேபாளமும், முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானும் மோதின.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.