Syed Modi International: சையது மோடி பேட்மிண்டன் அரையிறுதியில் கிராஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Syed Modi International: சையது மோடி பேட்மிண்டன் அரையிறுதியில் கிராஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி!

Syed Modi International: சையது மோடி பேட்மிண்டன் அரையிறுதியில் கிராஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி!

Manigandan K T HT Tamil
Dec 02, 2023 11:56 AM IST

தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் அரையிறுதியில் சனிக்கிழமை விளையாட உள்ளனர்.

பேட்மின்டன் வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா-கிராஸ்டோ (Photo by Deepak Gupta/Hindustan Times)
பேட்மின்டன் வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா-கிராஸ்டோ (Photo by Deepak Gupta/Hindustan Times)

உலக தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள பிரியன்ஷு, காலிறுதியில் 21-15, 21-16 என்ற கணக்கில் தற்போதைய ஜூனியர் உலகின் நம்பர் ஒன் பேட்மின்டன் வீரர் இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானை தோற்கடித்து முன்னேறினார். இந்த பேட்மிண்டன் உலக சம்மேளனத்தின் (BWF) சூப்பர் 300 போட்டியில் விளையாடும் ஒரே இந்திய ஒற்றையர் வீரர் இவர் தான்.

பிரியன்ஷுவின் அரையிறுதியில் தைவானின் சி யு ஜென் போட்டியிட்டார். 

முன்னதாக, பிரியன்ஷு இந்த ஆண்டு ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். அவர் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி எளிதாக வென்றார், ஆனால் இரண்டாவது ஆட்டத்தில் கடுமையாக உழைத்தார்.

இரண்டாவது கேமில், பிரியன்ஷு தனது ஐந்து புள்ளிகள் முன்னிலையில் தடுமாறி ஒரு கட்டத்தில் 11-14 என பின்தங்கியிருந்தார், ஆனால்  மீண்டும் போராடி 49 நிமிடங்களில் போட்டியை வென்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா-அஷ்வினி ஜோடி, அகில இந்திய காலிறுதியில் 21-19, 21-8 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடியை வீழ்த்தியது.

காமன்வெல்த் விளையாட்டு 2022 பதக்கம் வென்ற ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் முதல் கேமில் 19-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர், ஆனால் க்ராஸ்டோ மற்றும் அஸ்வின் பொன்னப்பா ஆகியோர் இறுதி மூன்று புள்ளிகளை வென்றனர்.

சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனலின் அனைத்து முடிவுகளும் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான வீரர்களின் தகுதித் தரவரிசையில் கணக்கிடப்படும். நவம்பர் 28ஆம் தேதி லக்னோவில் தொடங்கிய இந்தப் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.