தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Ketu Peyarchi: பண மழையில் நனைக்க போகும் ராகு கேது.. அருளாசிகளை பெறும் ராசிகள்

Rahu Ketu Peyarchi: பண மழையில் நனைக்க போகும் ராகு கேது.. அருளாசிகளை பெறும் ராசிகள்

Feb 16, 2024 12:46 PM IST Suriyakumar Jayabalan
Feb 16, 2024 12:46 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது அருளால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை பெறும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக ராகு கேது விளங்கி வருகின்றனர். இவர்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். 

(1 / 7)

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் மாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டு முழுவதும் இருவரும் இதே நிலையில் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். நவகிரகங்களில் ராசி மாற்றம் மட்டுமல்லாது மற்ற அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் ராகு கேது கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி அன்று நட்சத்திர மாற்றம் செய்தனர். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாறினார். இவர்களுடைய நட்சத்திர இடம் மாற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கும்ப ராசி: ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென்று அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களை தேடி வரும். பேச்சு திறமையால் மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். 

(4 / 7)

துலாம் ராசி: ராகு கேது இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

(5 / 7)

ரிஷப ராசி: உங்களுக்கு ராகு கேது சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்வில் சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(6 / 7)

மேஷ ராசி: குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத்திலிருந்து தடைகள் அனைத்தும் விலகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்