தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Daily Healthy Foods: நாள்தோறும் இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்! ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்

Daily Healthy Foods: நாள்தோறும் இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்! ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்

Sep 15, 2023 11:10 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 15, 2023 11:10 AM , IST

  • உடல் ஆரோக்கியமாகவும், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளையும் பெறுவதற்கு நாள்தோறும் தவறாமல் சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் முக்கிய உணவுகளை பார்க்கலாம்

பூண்டு: சிறந்து சூப்பர் உணவாக இருந்து வரும் பூண்டில், அலிசின் நிறைந்துள்ளது. ஆர்கானிக் கந்தகமாக இதில் பூஞ்சை, பாக்டீரியாவுக்கு எதிரான பண்புகளும், ஆன்டிஆக்ஸிடன்கள் நிறைந்து காணப்படுகின்றன. உடலின் ப்ரீ ரேடிகல்களுக்கு எதிராக போராடுவதுடன், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஆபத்தை தடுக்கிறது. அழற்சிக்கு எதிரான பண்புகளும் பூண்டில் இருப்பதால் மூக்கடைப்பு, சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கும் தீர்வாக உள்ளது

(1 / 7)

தக்காளி: தாக்காளி இல்லாத இந்திய சமையல் இல்லை என்று கூறும் அளவில் அத்தியவசியமான உணவா இருந்து வரும் இதில் எடுத்துக்கொள்வதால் இதய நோய், புற்று நோய் அபாயம் குறைகிறது. எடை குறைப்புக்கு உதவுவதுடன், தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தக்காளியில் லைகோபின், பீட்டா கரோடீன், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஈ, பிளேவணாய்ட்கள், போலேட் ஆகியவை நிறைந்துள்ளன. டைப் 2 டயபிடிஸ் உருவாவதை தடுக்கிறது. 

(2 / 7)

வெங்காயம்: தக்காளியை போல் வெங்காயமும் இல்லாத உணவை உலகின் எந்த பகுதியிலும் காண முடியாது என்றே கூறலாம். வைட்டமின் சி, பி6, நார்ச்சத்துகள் நிறைந்திருக்கும் வெங்காயத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. நாள்பட்ட நோய்களை தடுக்கும் குவெர்செடின் என்ற அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளது. நார்ச்சத்துகள் செரிமானத்தை எளிமையாக்குகிறது. 

(3 / 7)

இஞ்சி: வாசனை மிகுந்த உணவு பொருளான இஞ்சியில் ஜிஞ்ஜரால் என்ற பயோ ஆக்டிவ் கெமிக்கல் உள்ளன. குமட்டல் ஏற்படுவதை தடுத்து, செரிமானத்தை சீராக்கும் பண்புகளை கொண்டுள்ளது. வயிற்று வலி இருப்பவர்கள் இஞ்சியை அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். இதில் இருக்கும் அழற்சிக்கு எதிரான பண்புகள் தசை வலிகளை போக்குவதுடன், மூட்டுவலி அபாயத்தை குறைக்கிறது. நீங்கள் பருகும் பங்கள், உணவுகளில் துறுவிய இஞ்சி சேர்த்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

(4 / 7)

பச்சை மிளகாய்: கேப்சாய்கின் என்ற ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த பச்சை மிளகாய் உடல் வெப்பநிலையை சீராக்கி வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்துகிறது. எடை குறைப்பு, ரத்து ஓட்டத்தை மேம்படுத்துவது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை செய்கிறது. வைட்டமின் ஏ, பி6, கால்சியம், துத்தநாகம், இரும்பு சத்துக்கள் நிறைந்ததாக பச்சை மிளகாய் உள்ளது 

(5 / 7)

கொட்டை வகைகள்: பாதாம், முந்திரி, பிஸ்தா, வாதுமை என நாள்தோறும் ஏதாவதொரு கொட்டை வகைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் கொட்டைகளில் நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள், அடிப்படையான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. வீக்கத்தை குறைக்கும் தன்மை இவற்றுக்கு இருப்பதுடன், ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்திருப்பதால் ஒட்டு மொத்த உடல் நலத்துக்கும் நன்மை தருகிறது

(6 / 7)

முட்டை: புரதம் அதிகம் நிறைந்த உணவாக இருக்கும் முட்டையை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றம் மேம்படுகிறது. பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது. மூளை, இதயம், எலும்பு, கண்களுக்கு நன்மை தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிகிறது.  செலினியம் நிறைந்திருப்பதால் சருமத்துக்கும் நன்மை தருகிறது

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்