தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suns Transit 2024: சூரியனின் பெயர்ச்சி 2024: இல்லற வாழ்வில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்

Suns Transit 2024: சூரியனின் பெயர்ச்சி 2024: இல்லற வாழ்வில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிகள்

Apr 06, 2024 08:17 PM IST Marimuthu M
Apr 06, 2024 08:17 PM , IST

  • Sun Transit 2024: சூரிய பகவான் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி, மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் துரதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

Sun Transit: கிரகங்களின் அரசனான சூரிய பகவான் விரைவில் தனது ராசியை மாற்றப் போகிறார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 8:51 மணிக்கு, சூரிய பகவான் மேஷ ராசியில் நுழையவுள்ளார். சூரிய பகவானின், இந்தப் பயணம் மக்களின் தைரியத்தை அதிகரிக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் பொறுமை இருக்காது.

(1 / 5)

சூரிய பகவானின் இந்த பெயர்ச்சி உறவுகளைப் பொருத்தவரை நன்றாக இருக்காது. சூரிய பகவானின் மாற்றம் சில ராசிகளின் காதல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். காதல் உறவுகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

(2 / 5)

ரிஷபம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் சில பிரச்சினைகள் எழலாம். கணவன் - மனைவியாக இருந்தால், இருவருக்கும் இடையே பிரச்னை எழலாம். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் சூரியனின் பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் தங்கள் இல்லறத்துணையிடம் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கலாம். இந்த நேரத்தில், உங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அதனைத்தொடர்ந்து உங்களுக்கு உங்கள் குடும்பம் முக்கியமா அல்லது இல்லறத்துணை முக்கியமா என்னும் குழப்பம் கூட வரலாம்.

(3 / 5)

மகரம்: சூரிய பகவானின் பெயர்ச்சிக்குப் பின், மகர ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு உறவுச்சிக்கல்கள் நிறைய அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் மனம் விரக்தியால் நிரப்பப்படலாம். உங்களுக்கும் உங்கள் இல்லறத்துணைக்கும் இடையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம், இதன் காரணமாக உங்கள் இருவருக்கும் இடையே மனதளவிலும் உடல் அளவிலும் இடைவெளி உருவாகலாம். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் இருவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். இந்த நேரத்தில், மகர ராசியினர் மிகப்பொறுமையாக இருக்க வேண்டும்.

(4 / 5)

மீனம்: மீன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையிலும் திருமண வாழ்க்கையிலும் சூரியனின் பெயர்ச்சி எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன், உங்கள் வாக்குவாதம் மிகவும் அதிகரிக்கக்கூடும், இதனால் பிரிந்துபோகும் சூழ்நிலை கூட உண்டாகக் கூடும். உங்கள் உறவில் தவறான புரிதலுக்கான அறிகுறிகள் உள்ளன. இல்வாழ்க்கைத்துணையுடன் உங்களுக்கு மனக்கசப்பு அதிகரிக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்னைகள் வரயிருப்பதால், உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். உங்கள் இல்லற வாழ்வை மேம்படுத்த, உங்கள் இல்வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேச வேண்டும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்