தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actor Barath: காதல் முதல் லவ் வரை.. நடிகர் பரத்தின் திரைப்பயணம் ஓர் பார்வை!

Actor Barath: காதல் முதல் லவ் வரை.. நடிகர் பரத்தின் திரைப்பயணம் ஓர் பார்வை!

Sep 22, 2023 10:34 AM IST Marimuthu M
Sep 22, 2023 10:34 AM , IST

  • நடிகர் பரத் தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ளார். அவரது திரைப்பயணம் குறித்து காண்போம். 

 2003-ம் ஆண்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் ஜெயராஜ் இயக்கிய மலையாளத் திரைப்படமான 4 தி பீப்பிள் (2004) படத்தில் நடித்தார். இது கேரளாவில் பிளாக்பஸ்டராக அமைந்தது. பின்னர், செல்லமே (2004) படத்தில் நெகட்டிவ் ரோலில் கலக்கினார்

(1 / 6)

பின், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பட்டியல், எம்டன் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம், ஐந்து ஐந்து ஐந்து, காளிதாஸ் ஆகியவை இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

(2 / 6)

பரத்தின் இயற்பெயர் பரத் ஸ்ரீனிவாசன். 1980 ஜூலை 21 அன்று திருச்சியில் பிறந்தார். பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தனது 11 வயதில் ஸ்விங்கர்ஸ் இன்டர்நேஷனல் டான்ஸ் கிளப்பில் சேர்ந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை டிஏவி சீனியர் செகண்டரி பள்ளியில் முடித்தார். பரத்திற்கு ப்ரீத்தி என்ற தங்கை உள்ளார். 2019இல் வெளியான காளிதாஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. 

(3 / 6)

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படமான குருப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். சில படங்கள் வெற்றி பெற்றுள்ளன. சில படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. ஆனால், தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் திரையுலகில் இயங்கி வருகிறார்.

(4 / 6)

நடிகர் பரத் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த ராதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் இதற்கு முன்பு ஜாக்பாட் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார்.

(5 / 6)

பரத், தனது தோழி ஜெஷ்லி என்பவரை 9 செப்டம்பர் 2013 அன்று சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தற்போது இவரின் நடிப்பில் லவ் என்ற படம் வெளியாகி ஆவரேஜாக ஓடியது. இது இவரது 50வது திரைப்படம் ஆகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்