World Patient Safety Day: உலக நோயாளி பாதுகாப்பு தினம்: அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Patient Safety Day: உலக நோயாளி பாதுகாப்பு தினம்: அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்

World Patient Safety Day: உலக நோயாளி பாதுகாப்பு தினம்: அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்

Marimuthu M HT Tamil
Sep 17, 2024 07:50 AM IST

World Patient Safety Day: உலக நோயாளி பாதுகாப்பு தினம் பற்றிய அறிந்ததும் அறியாததுமான தகவல்கள் குறித்துக் காண்போம்.

World Patient Safety Day: உலக நோயாளி பாதுகாப்பு தினம்: அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்
World Patient Safety Day: உலக நோயாளி பாதுகாப்பு தினம்: அறிந்ததும் அறியாததுமான தகவல்கள்

ஒரு நோயறிதல் ஒரு நோயாளியின் உடல்நலப் பிரச்சனையை அடையாளம் காட்டுகிறது. இறுதி நோயறிதல் மற்றும் சிகிச்சையை அடைவதற்கு முன் நோயாளியுடன் கலந்துரையாடல், பரிசோதனை மற்றும் முடிவுகளை மதிப்பாய்வு செய்வது ஆகியவை இதில் அடங்கும். தாமதமான, தவறான அல்லது தவறவிட்ட நோயறிதல் நோயை நீடிக்கும் மற்றும் சில நேரங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்தும்.

நோயாளி பாதுகாப்பு மருத்துவ சேவைகளை வழங்கும்போது நோயாளிகளுக்கு ஏற்படும் தவறான சிகிச்சைகள், பாதகமான நிகழ்வுகள் மற்றும் தீங்கு ஆகியவற்றைத் தடுப்பதில், உலக நோயாளி பாதுகாப்பு தினம் கவனம் செலுத்துகிறது.

நாள்:

உலக நோயாளி பாதுகாப்புத் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலாறு:

மே 2019ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 72ஆவது உலக சுகாதார மாநாட்டின்போது, உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள், நோயாளி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை முன்னுரிமையாக அங்கீகரித்தன.

இதுதொடர்பாக, "நோயாளி பாதுகாப்பு குறித்த உலகளாவிய நடவடிக்கை" என்ற தலைப்பில் ஒரு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானம் உலக அளவில் நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. உலக நோயாளி பாதுகாப்பு தினத்தை ஆண்டுதோறும் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டது.

எனவே, உலக சுகாதார சபையில் நோயாளி பாதுகாப்பு குறித்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உலக நோயாளி பாதுகாப்பு தினம் செப்டம்பர் 17, 2019ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது.

எனவே தான், செப்டம்பர் 17ஆம் தேதி உலக நோயாளி பாதுகாப்புதினமாக கொண்டாடப்படுகிறது.

முக்கியத்துவம்:

உலக நோயாளி பாதுகாப்பு தினம் என்பது மருத்துவத்துறை அமைப்புகளில் நோயாளி பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நோயாளி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகள் மற்றும் அரசு, மருத்துவமனைகள் மற்றும் நோயாளியின் வழக்கறிஞர்களுக்கு இடையிலான நடைமுறைகளுக்கு வாதிடுவதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

மேலும், உலக நோயாளி பாதுகாப்பு தினம் என்பது சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சியைப் பகிர்வதை ஊக்குவிக்கிறது. நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள் மருத்துவப் பராமரிப்பில் தீவிரமாகப் பங்கேற்கவும், கேள்விகளைக் கேட்கவும் உதவுகிறது. மேலும், மருத்துவமனைகளில் ஒருவரின் உரிமைகளைப் புரிந்துகொள்ளவும், நோயாளியின் பாதுகாப்புத் தரங்கள் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட அறிவுறுத்துகிறது. அதேபோல், மருத்துவ நிறுவனங்கள், அரசாங்கங்கள் இடையே உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக நோயாளி பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள்:

ஒவ்வொரு ஆண்டும், உலக நோயாளிப் பாதுகாப்பு தினம் என்பது மருந்து பாதுகாப்பு, மருத்துவப் பணியாளர் பாதுகாப்பு மற்றும் நோயாளியின் ஈடுபாடு போன்ற நோயாளி பாதுகாப்பின் பல்வேறு அம்சங்களை முன்னிலைப்படுத்த ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் அல்லது தீம்மைக் கொண்டுள்ளது.

எனவே, இந்த ஆண்டுக்கான உலக நோயாளி பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள், நோயாளியின் பாதுகாப்பிற்காக நோயறிதலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும் சரியாகப் பெறுங்கள் மற்றும் பாதுகாப்பாகப் பெறுங்கள் என்ற நோக்கத்தை முழங்குகிறது.

இன்றைய தினம், நோயாளிகள் மற்றும் குடும்பங்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதில், நோயைக் கண்டறிதலில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.