நான் ஏன் கடிகாரம் அணிவதில்லை.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. மதிப்புமிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ. சொன்ன சூப்பர் பதில்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நான் ஏன் கடிகாரம் அணிவதில்லை.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. மதிப்புமிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ. சொன்ன சூப்பர் பதில்

நான் ஏன் கடிகாரம் அணிவதில்லை.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. மதிப்புமிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ. சொன்ன சூப்பர் பதில்

Marimuthu M HT Tamil
Nov 10, 2024 11:53 PM IST

நான் ஏன் கடிகாரம் அணிவதில்லை.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. மதிப்புமிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ. சொன்ன சூப்பர் பதில் அளித்துள்ளார்.

நான் ஏன் கடிகாரம் அணிவதில்லை.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. மதிப்புமிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ. சொன்ன சூப்பர் பதில்
நான் ஏன் கடிகாரம் அணிவதில்லை.. கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. மதிப்புமிக்க நிறுவனத்தின் சி.இ.ஓ. சொன்ன சூப்பர் பதில் (Instagram/entrepreneursonig)

என்விடியா (Nvidia) என்னும் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங். அவர் தான் ஒருபோதும் கடிகாரம் அணியவில்லை என்றும்; தான் கடிகாரம் அணியாததற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். 

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், என்விடியா மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது நிறுவனத்தின் நெறிமுறைகளைப் பற்றி பேசுகிறார். 

அதிகம் பணியாற்றுவது எளிது:

அதில், "அதிகம் பணியாற்றுவது எளிதானது; குறைவாக பணியாற்றுவது தான் கடினம்’’ என என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஜென்சன் ஹுவாங் தான் பற்றியும், அவரது நிறுவனமும் நிகழ்காலத்தில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் என்பதைப் பகிர்ந்துள்ளார். இது இறுதியில் அவர்களின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார். 

அதன்படி அவர், "வெகு சிலருக்கே இது தெரியும், ஆனால் நான் கைக்கடிகாரம் அணிவதில்லை. நான் கடிகாரம் அணியாததற்கான காரணம் என்னவென்றால், இப்போது இருக்கும் நேரம் தான் நமக்கான மிக முக்கியமான நேரம். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்; எனக்கு லட்சியம் இல்லை. இதற்கு மேல் இலக்கு வைத்து பணி செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நான் தற்போது என்ன செய்கிறேனோ அதை சிறப்பாக செய்ய விரும்புகிறேன். நான் இன்னும் நிறைவான சாதனைகளைப் பெற்றவனாக உணரவில்லை. உலகம் என்னைத் தேடி வரும்வரை காத்திருக்கிறேன்" எனப் பதிலளித்து இருக்கிறார்.

தனது நிறுவனமும் இதேபோன்ற தத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதாக என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங் கூறியிருக்கிறார். மேலும், அவர்,"என்விடியா ஒரு நீண்டகால இலக்கு மற்றும் வளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் என்னை அறிந்தவர்கள் அறிவார்கள். எங்களிடம் நீண்டகால திட்டம் இல்லை. நீண்டகாலத் திட்டம் என்பதற்கான எங்கள் வரையறை ‘இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?’என்பதுதான்’’ என ஜென்சன் ஹுவாங் தெரிவித்து இருக்கிறார். 

சிறந்த தொழில் ஆலோசனை:

என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் அவர்களின், ‘சிறந்த தொழில் ஆலோசனை’ என்னும் தலைப்பிடப்பட்ட ஒரு நேர்காணலில், தொழில்நுட்ப தொழில்முனைவோரான தனக்கும் தோட்டக்காரரான தனக்கும் நடந்த இதயப்பூர்வமான உரையாடலை நடத்திய நேரத்தைப் பற்றிய ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார். இது விஷயங்களைத் துரத்தக்கூடாது என்ற தனது சித்தாந்தத்தை உருவாக்கியது என்று அந்த தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார். 

ஜப்பானின் கியோட்டோவில் உள்ள ஒரு கோயிலில் தோட்டக்காரர் தனது பணியினை “அன்புடன்” செய்துவந்தார். இது பெரிய தோட்டத்தின் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின்போது கூட சரியான நிலையில் இருந்தது.

தோட்டத்தை எவ்வாறு பராமரிக்க முடிகிறது என்று தோட்டக்காரரிடம் கேட்டதாக ஹுவாங் கூறினார். அதில்,"எனக்கு நிறைய நேரம் இருக்கிறது," என்று அந்த தோட்டக்காரர் ஹூவாங்கிடம் பதிலளித்திருக்கிறார்.

இதுதான் அவரை மாற்றியிருக்கிறது. இதுதொடர்பாக பேசிய என்விடியா (Nvidia) என்னும் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹூவாங்,"இது நான் கொடுக்கக்கூடிய சிறந்த தொழில் ஆலோசனை ஆகும். இப்போது நம் கையில் இருக்கும் நேரமே மிக முக்கியமான நேரம் ஆகும். இப்போது நீங்கள் எடுத்துக்கொண்ட பணியில் முழுமையாக இறங்குங்கள். நான் எப்போதாவதே எனது டார்கெட் பின் செல்கிறேன். நான் இந்த நொடியில் கவனம் செலுத்துகிறேன். நான் என் வேலையை அனுபவித்து செய்கிறேன்," என்று அவர் கூறியிருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

வீடியோவை பார்க்க கீழே சொடுக்கவும்:

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.