இந்த ஒரு நாளாவது என்னை விடுங்க.. அன்புவிடம் கறார் காட்டும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
அழகன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஆனந்தி, அன்புவிடம் தன்னை இன்று ஒருநாளாவது என் போக்கில் விடுங்கள் என கறார் காட்டி பேசியுள்ளார்.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்திக்கு தான் காதலித்த அழகன் என்பவர் குறித்த தகவல் ஆட்டோக்காரர் மூலமாக தெரியவந்ததை அடுத்து, அழகனை கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆனந்தி தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து அழகனை கண்டுபிடிக்க அவர் என்னென்ன செய்கிறார் என்பதை இனிவரும் சூழலில் நாம் பார்க்கலாம். இந்நிலையில், சிங்கப்பெண்ணே சீரியலின் ப்ரிவியூ வீடியோவை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
அன்புவிடம் மழுப்பும் ஆனந்தி
அந்த வீடியோவில், அன்பு ஆனந்திக்காக காஃபி எடுத்துக் கொண்டு அவரது அறைக்கு வருகிறார். அப்போது, மிகவும் காலை நேரத்திலேயே ஆனந்தி வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அன்பு, ஆனந்தியிடம் எங்கே கிளம்பிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
ஆனந்தி மிக தயக்கத்துடன் வெளியில் எனக்கு ஒரு வேலை இருக்கிறது என பதில் கூறாமல் மழுப்பினார். இதைக் கேட்ட அன்பு, முன்பே சொல்லி இருந்தால் நானும் சீக்கிரம் கிளம்பி இருப்பேனே என கேட்கிறார். அப்போது இடைமறித்த ஆனந்தி, இல்லை நான் தனியாகவே போகிறேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.
அழகனை காண அன்புவை கழட்டி விடும் ஆனந்தி
தற்போதுவரை ஆனந்தி எங்கே செல்கிறார் எனக் கூறாமலே இருப்பதால், அன்புவே ஆனந்தியிடம் எங்கு செல்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா எனக் கேள்வி எழுப்புவார். அப்போது, ஆனந்தி தயங்கி தயங்கி அழகனை நேரில் பார்த்த ஆட்டோக்காரரை பார்த்து உண்மையை அறியப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த அன்பு, ஆனந்தியை போக வேண்டாம் எனத் தடுக்கிறார், அத்துடன் மீண்டும் யாரையாவது நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறுகிறார்.
என் போக்கில் என்னைய விடுங்க- கறார் காட்டிய ஆனந்தி
அப்போது பேசிய ஆனந்தி, இந்த ஒருமுறையாவது என் போக்கில் என்னை விடுங்கள். நான் எப்படியாவது இன்றைக்குள் அழகன் யார் என்பதைக் கண்டறிந்து உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவேன் என சபதமிடுகிறார். இதனால், வேறு வழி இல்லாமல் அன்பு ஆனந்தியிடம் உங்கள் இஷ்டம். இனி நான் என்ன சொல்வது எனக் கேட்கிறார். பின், வீட்டின் வெளியில் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு வருவதாக கூறி அன்பு செல்கிறார். இப்படியாக இவர்களது பேச்சு முடிந்து, ஆனந்தி அழகனைக் காண புறப்படுகிறார்.
அழகன் பற்றி அறியும் ஆனந்தி
முன்னதாக நேற்று, ஆட்டோவில் வெளியே சென்று கொண்டிருக்கும் ஆனந்தியடம், ஆட்டோ டிரைவர் அழகன் குறித்த தகவலைத் தருவார். அவர், அழகனை சில நாட்களுக்கு முன் பார்த்ததாக கூறுவார். இதைக்கேட்ட ஆனந்தி, என்ன செய்வது என்று புரியாமல் அன்புவிற்கு போன் செய்துள்ளார். அப்போது, நான் சொல்வதைக் கேட்டு கோபப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் பேசவே ஆரம்பிக்கிறார்.
விழி பிதுங்கிய அன்பு
அப்போது, அவர் அழகன் குறித்து தான் கேள்விப்பட்ட அனைத்து விஷயங்களையும் அன்புவிடம் கூறினார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அன்பு விழி பிதுங்கி நின்றான்.
அதே சயமத்தில், மித்ரா கம்பெனியில் உள்ள லெட்டர் ஒன்றை கண்டுபிடித்து, அதிலுள்ள கையெழுத்தை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்க நினைக்கிறார். இதற்கு கருணாகரனை தனக்கு துணையாக வைக்க விரும்புகிறார்.
இந்தக் காட்சிகளை பார்க்கும் போது ஆனந்தி, அழகன் யார் என்பதை விரைவில் கண்டு பிடிப்பார் எனவும், இதனால் அன்புவிற்கும் ஆனந்திக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்