தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Violence : ஜாம்ஷெட்பூரில் தீ வைப்பு, கல்வீச்சு, வன்முறை – இரு குழுக்கள் மோதல்

Violence : ஜாம்ஷெட்பூரில் தீ வைப்பு, கல்வீச்சு, வன்முறை – இரு குழுக்கள் மோதல்

Priyadarshini R HT Tamil
Apr 10, 2023 12:22 PM IST

ஜாம்ஷெட்பூரில் இருக்குழுக்களிடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. தற்போது சூழ்ல் நிலை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்ட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜாம்ஷெட்பூர் வன்முறையில் தீ வைக்கப்பட்டது
ஜாம்ஷெட்பூர் வன்முறையில் தீ வைக்கப்பட்டது

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு குழுவினர் மோதிக்கொண்டதில் ஜாம்ஷெட்பூரில் கடுமையான பதற்றம் நிலவியது. இரு குழுவினரும் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த இடங்களில் தீவைத்து கொளுத்தினர். அந்தவழியாகச் சென்று வந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தினர். இதனால் ஜாம்ஷெட்பூரின் சாஸ்திரி நகரில் பதற்றம் நிலவியது. இப்பகுதி கட்மா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் வருகிறது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்தி சூழ்நிலையை கட்டுப்பபாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட சிலரை போலீசார் உடனடியாக கைது செய்து நிலைமையை கட்டுக்குள்கொண்டு வந்தனர்.

ஆங்காங்கே நடந்த சிறுசிறு சம்பவங்கள் ஜாம்ஷெட்பூரின் சாஸ்திரி நகரில் பெரிய வன்முறையை ஏற்படுத்திவிட்டது. வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இரு குழுவினர், கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். சமூக விரோதிகள் சிலர் அமைதியை குலைக்கும் வகையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருந்தார்கள். எனவே எவ்வித குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களுடனும் மக்கள் சேர வேண்டாம். அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் எடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டனர். மக்கள் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். அதுபோல் அசம்பாவித சம்பவங்கள் எங்கு நடந்தாலும் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஜாம்ஷெட்பூர் துணை கமிஷ்னர் விஜய ஜாதவ் கூறினார். 

நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது. வன்முறைக்காக கூடியவர்கள் அறிவுரைக்குப்பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஃப்.ஏ. கம்பெனி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை ஜாம்ஷெட்பூர் மூத்த எஸ்பி பிரபாத்குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

அங்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக 144 தடை ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்