HBD Kumari Ananthan: பெருந்தலைவர் காமராஜர் விருது.. தமிழில் பேசும் உரிமை பெற்ற நாயகன் குமரி அனந்தன்
Kumari Ananthan: 1991ல் சாத்தான் குள தொகுதியில் மீண்டும் தேர்வானார். தன் வாழ்நாளில் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 1996ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குமரி அனந்தன்.
இவர் 1933 மார்ச் 19ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் பகுதியில் இருந்த குமரி மங்கலம் என்ற அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தார். இந்த ஊர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. இவர் விடுதலை போராட்ட வீரரான ஹரிகிருஷ்ண பெருமாள் மற்றும் தங்கம்மை தம்பதியின் மகனாக பிறந்தார்.
இவரது தம்பி வசந்த குமார். இவரது மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு ஒரு மகன் 4 மகள்கள். இவரது மகளான தமிழிசை தற்போது தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தார்.
இவர் தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். எம்.ஏ தமிழ் படித்தவர். இவர் டாக்டர் பட்டமும்பெற்றுள்ளார். சில காலம் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். பின் காங்கிரஸில் இணைந்தார் பெருந்தலைவர் காமராஜரின் பாதையில் செயல்பட்டார். காந்திய பாதையில் தன் வாழ்க்கையை அமைத்து கொண்டார். ஏற்கனவே காமராஜர் வெற்றி பெற்றிருந்த
நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் 1977ல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ல் திருவெற்றியூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரானார். 1984ல் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் 1989ம் ஆண்டு சாத்தான் குளம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ல் சாத்தான் குள தொகுதியில் மீண்டும் தேர்வானார். தன் வாழ்நாளில் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 1996ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் குமரி அனந்தன்.
மிகச்சிறந்த மேடைப் பேச்சாளரான குமரி அனந்தன் பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்று தந்தார்.
இவருடைய மனைவியின் பெயர் கிருஷ்ணகுமாரி இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவருடைய மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் ஆவார். அது மட்டுமல்ல பாஜக கட்சியில் மிகப்பெரிய அரசியல்வாதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்தார். வசந்த் அன் கோ வைத்திருக்கக்கூடிய தொழிலதிபரான எச் வசந்தகுமார் இவருடைய தம்பி ஆவார்.
1967 காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது துவண்டு கிடந்த காங்கிரஸ்ஸை தூக்கி நிறுத்துவதற்கு, 1968 அக்டோபர் இரண்டாம் நாள் குமரியில் தொடங்கி, இளைஞர்களோடு சென்னையை நோக்கி பாதயாத்திரையை முதன் முறையாக மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சியில் எழுச்சி ஏற்படுத்திய பெருமை இவரையே சாரும். 17 முறை மக்கள் பிரச்சனைகளுக்காகப் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இவர் தன் வாழ்நாளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளார். அதில் பேச்சுக்கலைப்பயிற்சி, பூச்சரம், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், படித்தேன் கொடுத்தேன் போன்ற பல முக்கிய நூல்களும் இதில் அடங்கும்.
கடந்த 2011ல் தினத்தந்தி மூத்த தமிழறிஞர் விருதை குமரி அனந்தனுக்கு வழங்கி சிறப்பித்தது.
அவர் பிறந்த அகஸ்தீஸ்வரத்தில் குமரி அனந்தன் தெரு என்று ஒரு தெருவிற்கு பெயரிட்டு தமிழக அரசு கவுரவ படுத்தி உள்ளது. சமீபத்தில் 2021ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதை தமிழக அரசு குமரி அனந்தனுக்கு வழங்கி சிறப்பித்தது.
இலக்கியச் செல்வர், தமிழ் பற்றாளர், சிறந்த மேடைப்பேச்சாளர், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையை பெற்றுத்தந்தவர் என பன்முகம் கொண்ட முது பெரும் தலைவர் குமரி அனந்தனின் இந்த பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் ஹெச்டி தமிழ் பெரு மகிழ்ச்சி அடைகிறது.
டாபிக்ஸ்