தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  People Gathered In Kanyakumari Sea To Honor Their Ancestors Marking The Thai Amavasai

Kanyakumari: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் - விடியோ

Feb 09, 2024 02:01 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 09, 2024 02:01 PM IST
  • தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும், புனித நீராடும் சடங்கில் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை முதலே ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களில் தை அமாவாசை வழிபாடு நடந்து வருகிறது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். முக்கடலும் சங்கமிக்கும் பகுதியில் புனித நீராடலும் மேற்கொண்டனர். ஆண்டுதோறும் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் இந்த நாளில் எள், அரிசி, தர்ப்பண புல், விபூதி, குங்குமம் தர்ப்பணம் செய்யப்படும் பூஜை செய்த இலையை தலையில் வைத்து முக்கடல் சங்கமத்தில் கடலில் மூழ்கி பக்தர்கள் நீராடுவார்கள் பூஜை செய்த இலையை பின்னர் கடலிலேயே விடுவது சடங்காக உள்ளது.
More